| பொழுதில் ஏமாற்றமாக மாறுவதை உணர்த்துகிறது. 'தமியன்' என்ற சொல் அந்த ஏமாற்றத்தை நம் நெஞ்சில் பதியச் செய்து விடுகிறது. இவ்வாறு பாட்டுகளில் சொற்கள் உணர்த்தும் உணர்ச்சிகளும் புதுப் பொருள்களும் கணக்கற்றவை. அறிவு நூல்களில் சொற்களுக்கு வரையறுத்த பொருள் இருத்தல்போல் பாட்டுகளில் இல்லை. பாட்டுகளில் அமையும் சொற்களுக்கு வெவ்வேறு பொருள்கள் உண்டு; அந்த பொருள் களுள் நாம் விரும்புவனவற்றைக் கொள்ளத் தக்கவாறு அவை நெகிழ்ந்து கொடுக்கின்றன. பாட்டைப் படித்து அதன் ஒலிநயத் திலும் உணர்ச்சியிலும் ஈடுபட்டவுடன், அந்த உணர்ச்சியைச் சிறப் பிக்கத் தக்க பொருளை மட்டும் கொள்கிறோம். உணர்ச்சியோடு பேசும் பேச்சிலும் இவ்வாறே சொற்கள் வரையறுத்த அகராதிப் பொருளை விட்டு உணர்ச்சிநிலைக்கு ஏற்ற பொருளைப் பயத்தல் காணலாம்1.ஆகவே சொல்லும் முறை பெரிதாக நிற்கின்றதே அல்லாமல், சொற்பொருள் இன்றியமையாததாக இல்லை. அறிவு நூல்களிலோ, வரையறுத்த சொற் பொருளே இன்றியமையாதது; சொல்லும் முறையால் புதிதாக உணர்த்தக்கூடியது ஒன்றும் அங்கு இல்லை2. 1. Most words are ambigious as regards their plain sense, especially in poetry. We can take them as we please in a variety of senses. The sense we are pleased to choose is the one which most suits the impulses already stired through the form of the verse...In its use of words poetry is just the reverse of science. Very definite thoughts do occur but not because the words are so chosen as logically to ba out all possibilities but one. No But because the manner, the tone of voice the cadence and rhythem play upon our interests and make them pick our from among an indefinite number of possibilites the precise particular thought which they need. -I.A. Richards, Science and Poetry, pp.23.24. 2. Something infinitely variable (experience) must be committed to a notation (language) the capacity of which is by its very nature limited. Literary art, therefore, will always be in some degree suggestion and the height of literary art is to make the power of suggestion in language as commending, as far-reaching, as vivid, as subtle as possible L. Abercrombie, Principles of Literary Criticism, 39. |