பக்கம் எண் :

அறிவியலும் கலையும் 23

Untitled Document

நினைந்து  வருந்தினார். கடைசியாகப் பறம்புமலை தம் பார்வைக்கு 
எட்டாமல்     மறையும்   எல்லையில், கைகூப்பி  அம்மலையைத்
தொழுது  நின்றார்.கண்ணீர் சொரிந்து நின்றார். கண்ணீர் சொரிந்து
கலங்கினார்."பெரும்புகழ்  வாய்ந்த  பறம்பு மலையே! பாரி மாய்ந்த
காரணத்தால்,கலங்கிச்    செயலற்று,  நீர்  சொரியும்  கண்களோடு
தொழுது  உன்னை வாழ்த்தி  விடைபெற்றுச் செல்கிறோம்" என்றார்.

      பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
     நீர்வார் கண்ணோம் தொழுதுநிற் பழிச்சிச்
     சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே*

என்னும்   அடிகள்  ஈராயிரம் ஆண்டுகளுக்கு  முற்பட்ட பழைய
நிகழ்ச்சியைக்   குறிப்பன.ஆயினும் அவ்வடிகளைப் படிக்கும்போது
நெஞ்சம்   நெகிழ்கின்றது.காரணம்  என்ன ? வாழ்வு எவ்வளவோ
மாறிய போதிலும் ,பழகிய இடத்தையும்  பழகிய  நட்பையும் பிரிந்து
செல்லும்போது     வருந்தும்   அந்த  உணர்ச்சி இன்னும் நமக்கு
இயல்பாக உள்ளது.

      வெளியுலகத்துக்கு      மாறுதல்கள்        வாழ்க்கையை
மாற்றுவதைவிட,  மனத்தினுள் நிகழும்  மாறுதல்கள் வாழ்க்கையை
மாற்றுவது  மிகுதி.     அதனால் வாழ்க்கை என்பது பெரும்பாலும்
ஒருவர் உணர்வனவற்றை   ஒட்டியே    அமைகிறது   எனலாம்.1
உணர்ச்சியில்     ஏற்படும் மாறுதல்களே  வாழ்க்கையை விரைவில்
மாற்றி        அமைக்கின்றன.    அத்தகைய   ஆற்றல்   மிக்க
உணர்ச்சிகளோடு  அமைவது கலை.கலையைக் கற்பவர்க்கும் அந்த
உணர்ச்சிகள் ஏற்பட்டு அவரை இயக்குவதால்2 மனித வாழ்க்கையில்


        .*புறநானூறு, 13
         1.What is really most interesting   and   important  in  your  lives  happens
not  of your  body,  but to your mind  and soul. Men without  imagination  or   sensitive
ness can  live through  a  life-time  of  wonderful,  adventures, and    at  theend they
are  poor  as when they  started.
            -P.H.B. Lyon, The Discovery of Poetry.p.79.
         2. Life  is  determined by  the  emotions. Our motives  are never  foundin
the realm  of abstract  and  general truth; only  when  such truth    have beenpassed
through  the   feellings  can  they  take  hold upon  conduct  it  foelows that  allreally
vital  truths,    being  largely  truths of   emotion,    are  to  be  reached  not  bya
purely logical process, but  by  an exercise of  they  sympathies.
            -C.T. winchester, Some Principles of Literary criticism, p.246.