உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண் டாகும் வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் மேவு மாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம் விழிபெற்றுப் பதவி கொள்வார் தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார் * என்ற பாரதியாரின் கருத்து இங்கு உணரத் தக்கதாகும். கலை கலைக்காகவே? எதை உணர்த்துதல் என்ற வினாவிற்கு விடையாக, கலைஞர் தாம் பெற்ற அனுபவத்தைப் பிறர்க்கு உணர்த்துதல் எனக் கண்டோம். ஆகவே கலை என்பது கலைஞரின் அனுபவத்தை உணர்த்துதலை-அவ்அனுபவத்தை நாமும் பெறுமாறு செய்தலை- நோக்கமாகக் கொண்டது என்பது பெற்றோம். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில்- சிறப்பாக இங்கிலாந்தில்-அறிஞர் சிலர் கலை கலைக்காகவே என்றும், வேறு சிலர் கலை வாழ்க்கைக்காகவே (அல்லது இன்பத்திற்காகவே) என்றும் பிரிந்து சொற்போர் இட்டனர். பல ஆண்டுகள் வரையில் அது அறிஞரிடையே பெருஞ் சிக்கலாக இருந்து வந்தது. இன்று அது பற்றிக்கவலைப்படுவாரே இல்லாமல் சிக்கல் தீர்ந்துள்ளது.
ஆங்கில அறிஞர் ரஸ்கின் என்பவர், கலையின் வாயிலாக உயர்ந்த ஒழுக்கமும் அறமும் மக்களிடையே நிலவச் செய்ய வேண்டும் என்ற கொள்கையைப் பரப்பினார். அவ்வாறு கலையை ஒழுக்கத்திற்கும் அறத்திற்கும் உரிய கருவியாக்கிவிட்டால்,கலையும் சமயத் துறைபோல் ஆகித் தன் சிறப்பை இழந்துவிடுமே என்று அறிஞர் சிலர்அஞ்சினர்;அதனால் ரஸ்கின் பரப்பிய கொள்கையை எதிர்த்தனர். இவ்வாறு இரு சாராராய்ப் பிரிந்து எதிர்க்கும்போது, எதிர்ப்பதற்கு உரிய காரணங்களையே தேடிக்கொண்டிருப்பதும் நடுநிலையான உண்மையை மறப்பதும்புறக்கணிப்பதும் உலக * பாரதியார் பாடல்கள் , தமிழ் 4 |