பக்கம் எண் :

உணர்த்தல் 231

Untitled Document

இயற்கை. ஆதலின், இரு சாராரும் உண்மையை விட்டு ஒதுங்கினர்
கலை    வாழ்க்கைக்காகவே   என்றவர்,   கலை   இன்புறுத்தும்
இயல்புடையது   என்பதை   நன்கு   உணரத்   தவறினர். கலை
கலைக்காகவே   என்றவர்,   அறநெறிப்பட்ட  விழுமிய நோக்கம்
இருந்தாலன்றி உண்மையான  இன்பம் வாய்ப்பதில்லை என்பதைத்
தெளிந்திடத்   தவறினர்;   கலையிலே   ஒருவகை அழகுணர்ச்சி
உண்டு என்றும்,   அது தரும் இன்பமே சிறந்தது என்றும், அந்த
இன்பமே கலையின் நோக்கம் என்றும் அவர்கள் வாதாடினர்1.

     அந்நிலையில்,   புலவர்   இன்னதைத்தான்  பாடவேண்டும்
என்ற   வரையறை  கூடாது எனச் சிலர் கருதினர். அவர் எதைப்
பாடியுள்ளார் என்பதையே  காணல் வேண்டும் என்றனர். பாட்டின்
பொருள் எது என்பதைப்  பற்றிக் கவலைப்படாமல், பாட்டு அதை
உணர்த்தும்    முறை   எப்படி  என்பதையே கருதல் வேண்டும்
என்றனர்.

     ஆயின்   இவ்வாறு  ஒன்றை எதிர்க்கத் தொடங்கி மற்றோர் எல்லைக்குச் சென்று நிற்றல்,உண்மை  நாடுதலுக்கு உதவாது. கலை
கலைக்காகவே என்று கூறுதல்,  கலைஞர்  வேறு துறையினர்க்குக்
கருவியாதல்    கூடாது என்று   திருத்துவதற்கு உதவலாம்;2அவ்
வளவே அன்றி, கலைஞர்க்கு உயர்ந்த குறிக்கோள் பற்றிக் கவலை
இல்லை என்று கூறுவதற்கு உதவலாகாது.3

     இந்தத்   தெளிவு   ஏற்பட  வேண்டுமாயின், எதிர்மறையில்
அமைத்துக் காணல் வேண்டும்.  கலைக்கும் நல்லொழுக்கத்திற்கும்


     1. Almost from the beginning of scientific aesthetics
the insistence  upon the   aesthetic  experience peculiar,
complete, and  capable of being studied in isolation, has
received prominence...  They  amounted  often   to the
postulation  of a  specific thrill yielded by works of art
and nothing else,  unlike  and unconnected with all other
experiences
     -I.A. Richards, Principles of Literary Criticism, p.27.

     2. It matters not  what a poet says, so long as he
says the thing well.The what is poetically indiferent; It is
the how that counts.

     -A.C. Bardley, Poetry for Poetry's Sake p.11. 3.

     The doctrine of 'art for art's sake a mistaken one.
and more andvertised that practised, contained this true
impulse behing it,  that it is a  recognition of the poet's
trying to do other people's work.

     -T.S.Eliot, The Use of Poetry and the Use of
     Criticism, p.152.