பக்கம் எண் :

232இலக்கியத் திறன்

Untitled Document

தொடர்பு   இல்லை   எனின்,   நல்லொழுக்கத்தைப்   பழித்தும்
எதிர்த்தும்   ஒரு  நூல் எழுதிப் பார்க்கலாம் அந்த நூல் எழுதும்
அளவுக்குக்   கலைஞரின்   உள்ளத்தில்  உணர்ச்சி நிலைபெற்று
அமையாது.   அவர்   எழுதும்  நூலும்  கற்பவரின் உள்ளத்தில்
நிலையான   உணர்ச்சிகளைப்   பதியச்   செய்யாது. நல்லொழுக்
கத்தையும் மற்ற உயரிய குறிக்கோள்களையும் எதிர்த்தும் பழித்தும்
எழும்   நிலை,   வாழ்க்கையையே   எதிர்ப்பதாக  நின்று மாயும்.
ஆகவே,   கலை   கலைக்காகவே என்பதனைத்  தவறாகப் பயன்
படுத்தின், வீழ்ச்சியாகவே முடியும் என்பது உறுதியாகும்.

     கலையின்   பெருமையும்   வாழ்தல் வேண்டும்; வாழ்க்கைச்
சிறப்பும்    விளங்குதல்   வேண்டும்.  பாரதியார் தம் உள்ளத்தில்
மிகுந்திருந்த    வேட்கையையும்   தம்   பாட்டின்   வாயிலாகப்
புலப்படுத்தியுள்ளார்.     இன்பமும்    கற்பனை   விந்தையையும்
கூட்டி ஊட்டுவதற்குப்   பாட்டு   இயற்ற  வேண்டும் என்பது ஒரு
வேட்கை;   நாட்டு  மக்களின் நல்வாழ்க்கைக்கு உதவுமாறு பாட்டு
இயற்ற வேண்டும் என்பது மற்றொரு வேட்கை.

      நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
           நையப் பாடென் றொர்தெய்வதம் கூறுமே
     கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
           கொண்டு வையம் முழுதும் பயனுறப்

     பாட்டி லேயறம் காட்டெனும் ஓர் தெய்வம்
          பெண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும்
     ஊட்டி எங்கும் உவகை பெருகிட
          ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே1.


     We must    dissent  entirey from those critics who
would meassure  literature,   as well as art, by its power
to give an order of   pleasures with which, as they claim,
morality has nothing to do.The maxim "Art for Art's Sake'
is meaningless, and is   employed  usually as an apology
for a weak or licentious art.

     -C.T.Winchester, Some Principles of Literary
Criticism.p.108.

     1. A Poetry of   revolt   against   moral ideas is a
poetry of revolt   against   life; a poetry of indifference
towards moral ideas is a poetry  of indifference towards
life.
     -Mathew Arnoid, Essays in Criticism, P.144.