நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானி லத்தவர் மேனிலை எய்தவும் பாட்டி லேதனி இன்பத்தை நாட்டவும் பண்ணி லேகளி கூட்டவும் வேண்டிநான் மூட்டும் அன்புக் கனலொடு வாணியை முன்னு கின்ற பொழுதி லெலாங்குரல் காட்டி அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்1. இவ்வாறு இருவகையாலும் பயன் தருவதே பாட்டு ஆகும். 'பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடவேணும்'2 என்று பாடியபோது பாரதியாரின் உள்ளத்தில் பாட்டின் வாயிலாக உல கத்தின் நன்மைக்காகத் தொண்டாற்ற வேண்டும் என்ற கருத்தே மேலோங்கியிருந்தது. 'அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே' என்ற முன்னோரின் கொள்கையும் அதுவே ஆகும்3 'கலை கலைக்காகவே' என்ற கொள்கை அவர்கள் அறியாதது எனலாம். விழுமிய அடிப்படை கண் வாயிலாகவும் செவி வாயிலாகவும் மனம் பெறும் கவர்ச்சி மட்டும் இருத்தல் போதாது; அவை சலிப்பூட்டும். வாழ்க் கையின் உயர்ந்த அடிப்படை உணர்ச்சிகளாக உள்ள தியாகம், வீரம், அன்பு முதலியவை அமைந்து, அவற்றின் வாயிலாக உயிர் களெல்லாவற்றினுடனும் இயைந்து உணரும் விழுமிய அனுபவம் விளங்கினால்தான், கலை நிலைத்த இன்பம் தருவதாகின்றது. ஆகவே அழகுணர்ச்சி என்ற ஒன்றுமட்டும் போதாது.அந்த அழகு ணர்ச்சியே சிறப்புற வேண்டுமானால், விழுமிய வாழ்க்கை யுணர்ச்சியுடன் இயைந்து விளங்க வேண்டி யுள்ளது. அதனால் கலைக்காகவே என்பது ஓரளவு உண்மையே;முழு உண்மை அன்று. கலை ஒழுக்கமும் அறமும் உணர்த்தி வாழ்க்கையைப் பண் படுத்துவதற்காகவே அமைவது என்பதிலும் ஒரு குறை உள்ளது ஒழுக்கமும் அறமும் மட்டும் உணர்த்துதலே நோக்கம் எனின், காவியங்களும் கதைகளும் நாடகங்களும் இயற்றாமல், நீதி 1. பாரதியார் பாடல்கள், தோத்திரப் பாடல்கள்,பராசக்தி . 2. ஷெ, காணி நிலம் வேண்டும். 3. நன்னூல், பொதுப்பாயிரம், 10 |