பக்கம் எண் :

234இலக்கியத் திறன்

Untitled Document

நூல்கள்   மட்டுமே   இயற்றிச்    செல்லலாமே.   நீதி நூல்கள்,
உள்ளத்தின்   உணர்ச்சியை   எழுப்பி  ஒன்றுபடுத்தும் ஆற்றல்
இல்லாதவை;    ஆகவே கற்பனையும் உணர்ச்சியும் கூடிய கலை
வாயிலாக   உள்ளத்தைத்  தொடும் வழியை நாடவேண்டியுள்ளது.
அப்போது    அறிவுறுத்தல்   மட்டும் அல்லாமல் இன்புறுத்தலும்
கலையின் நோக்கம் ஆகின்றது. இங்கு,

     தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு
     காமுறுவர் கற்றறிந் தார்1


என்ற    திருவள்ளுவரின்   கருத்தை  நினைவூட்டிக் கொள்ளல்
வேண்டும், கலைஞர், முன்னே தாம் இன்புறல் வேண்டும் அதற்கு அழகுணர்ச்சி   மட்டும்  போதாது;  விழுமிய  வாழ்வுணர்ச்சியும்
வேண்டும். அவ் விழுமிய உணர்ச்சி இல்லாதபோது, அழகுணர்ச்சி
நிலைத்த   இன்பம்  தராமல் வீழ்ச்சியுறுகிறது. ஆகவே, இவ்வாறு
கலைஞர்  தாம் இன்புற்ற பிறகு, உலகம் இன்புறுமாறு உணர்த்தல்
வேண்டும்.   அழகுணர்ச்சியுடன்  விழுமிய  வாழ்வுணர்ச்சியையும்
குழைத்து உணர்த்தினால்தான்,  உலகமும்   சிறந்த இன்பம் பெற
முடியும்.    உண்மையாகவே   சிறந்த    கலையைப்   படைக்க
வேண்டுமானால்,  அழகுணர்ச்சி   ஒன்றையே  குறிக் கோளாகக்
கொண்டு   படைக்க   முயன்றால், அம்முயற்சிவெற்றி பெறாது.
இன்பத்தையே நாடி உழைப்பவர் இன்பம்  காணாமல் திகைப்பது
போல்,   அழகுணர்ச்சிக்கு   அப்பாற்பட்ட  விழுமிய நிலையை
நாடாமல்    அழகுணர்ச்சியை  மட்டுமே   நாடி   முயல்வோர்,
ஏமாற்றம் அடையநேரும் என்கிறார் அறிஞர் ஷார்ப்2

    அன்றியும்   கலைஞர்க்கு    அகத்தெழுச்சி   (inspiration)
சிறந்திருக்கும்   போது,  பிறர்க்கு இன்பம் தரவேண்டும் என்னும்
எண்ணமோ, புகழ் பெற வேண்டும் என்ற நோக்கமோ தோன்றாது
என்று அவர் கருதுகிறார்1 அழகுபட அமைக்க வேண்டும் என்ற


     1.  திருக்குறள், 389

     2. Just as the Pleasure-seekers is not the Pleasure
ainder, So he who aims only at artistic   effect, by that
very fact misses it. To reach the highest   art, we must
forget art, and aim beyond it.

     -J.C. Shairp. Aspects of poetry, P.3.

     3. While   the   inspiration   is at its strongest the
thought   of   giving  pleasure to  others or of winning
praise for himself is weakest
      Ibid, P.13