அவர்தம் மனநிலையைப் பயிற்சியால் பண்படுத்திக்கொள்வதைப் பொறுத்தே அமையும். ஒருவர் பண்பட்ட மனநிலை பெற்றிருக்கிறாரா இல்லையா என்பதை அறியச் சில தேர்வுகள் உண்டு. அவற்றைக் கொண்டு அவரவர் தம் தகுதியை உணர்ந்து கொள்ளலாம். பாட்டைப் பாடிய புலவரின் உணர்ச்சியனுபவம் ஒன்று உண்டு. படிப்பவரின் உணர்ச்சியனுபவம் ஒன்று உண்டு. இந்த இரண்டும் ஏறக்குறைய ஒன்றே ஆய்விடின், பாட்டை நுகரும் தகுதி பெற்றுவிட்டார் எனக் கொள்ளலாம், அப் பாட்டில் புலவர் தம் சொந்த உணர்ச்சியைக் கூறாமல், கற்பனையில் படைத்த மாந்தரின் (பாத்திரங்களின்) உணர்ச்சியை வடித்திருப்பாரானால், அந்த உணர்ச்சியனுபவம் படிப்பவரின் மனத்திற்கு ஏற்பட்டதா என்று தேர்ந்தறிய வேண்டும். ஏற்பட்டது எனின், தகுதி பெற்று விட்டதாகக் கொள்ளலாம். இது ஒரு தேர்வு; சிறந்த தேர்வுமாகும். புலவரின் } சொற்கள } படிப்பவரின் உணர்ச்சி } > சொற்பொருள } > உணர்ச்சி } ஒலிநயம் } புலவரின் உணர்ச்சிக்கும் படிப்பவரின் உணர்ச்சிக்கும் இடையே சொற்களும் சொற்பொருளும் ஒலிநயமும் உள்ளன. இவை ஓர் உள்ளத்திலிருந்து மற்றோர் உள்ளத்திற்கு உணர்ச்சியை மாற்றித் தருவதற்கு உதவும் கருவிகள். கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் தவிர, அவைகளைப் பற்றி எண்ணிக் கொண்டிருத்தல் கூடாது. பயன்படுத்த வல்லவர்களுக்கு அவற்றைப்பற்றிய எண்ணம் வராது. பயன்படுத்தும் திறம் குறைந்தவர்களுக்கே கருவிகளைப் பற்றிய எண்ணம் வரும். நடக்கவல்லவர்கள் கால்களைப் பற்றி எண்ணுவதே இல்லை. நடக்கத் திறன் இல்லாதவர்கள் அல்லது நடக்க இயலாதவாறு நோய் உள்ளவர்கள் மட்டுமே கால்களைப் பற்றி அடிக்கடி எண்ணநேரும். விரைந்து அழகாக எழுத வல்லவர்கள் எழுதும் கையைப் பற்றி எண்ணுவதே இல்லை. இவர்கள் எல்லோரும் கருவிகளைப்பற்றி எண்ணம் கொள்ளாமல் கருவிகளைப் பயன்படுத்துதல் போல், சொற்களையும் சொற்பொருளையும் ஒலிநயத்தையும் பற்றி எண்ணம் எழாமல் |