பக்கம் எண் :

நுகர்தல் 239

Untitled Document

பாட்டைப்   படித்து  உணர்ச்சியைப் பெற வேண்டும். அவ்வாறு
உணர்ச்சி   பெற    வல்லவர்கள்   பாட்டை   நுகரும்   தகுதி
பெற்றவர்கள் எனலாம்.

     இத்   தேர்வின்   போது,   முதலாவதுஉள்ளம் உணர்ச்சி
பெறுகிறதா  என்று  நோக்க வேண்டும். உணர்ச்சியே இல்லாமல்,
வரலாறு,   கணக்கு முதலியவற்றைக் கற்கும்போது மூளையளவில்
அறிவு பெற்றுப் படிப்பதுபோல் இருத்தல் கூடாது. ஏழும், எட்டும்
பதினைந்து என்றும்   அறியும்போது   அசையாதிருத்தல் போல்
பாட்டைப் படிக்கும்போதும் இருந்தால்; அவர் தகுதிபெறவில்லை
என்று கூறல் வேண்டும்.

தயக்கம்

     சொற்களும்   சொற்பொருளும்   புதியனவாக  இருந்தால்
சிறிது   தயக்கமும்  தடுமாற்றமும்  ஏற்படலாம். புலவர்காலத்துச்
சொல், படிப்பவர்க்கு விளங்காத திரி சொல்லாக மாறியிருக்கலாம்.
அப்போது   முதல்முறை  தயக்கம் ஏற்படுதல் இயற்கை. அந்தச்
சொற்களின் பொருள்   அறிந்த   பிறகு,  இரண்டாம் முறையில்
பாட்டைப் படிக்கும் போதேனும்,நேரே புலவரின் உணர்ச்சியோடு
ஒன்றிவிட   முடிகிறதா   என்று  காணவேண்டும்.  அப்போதும்
தயக்கம் ஏற்படின், அது குறையே ஆகும்.

இலக்கணம்முதலியன

     ஆகவே   சொற்களுக்கு    இலக்கணம்  கூறிக்கொண்டும்
சொற்களுக்குப்   பொருள்   கூறிக்கொண்டும்   உள்ளவரையில்
படிப்பவர்   பாட்டை   ஒரு  கலையாக நெருங்கவில்லை என்று
அறிதல்   வேண்டும்.   பாட்டின்   சொற்களுக்கு   இலக்கணம்
முதலியவற்றை அறிவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அம்
முயற்சியை    இலக்கணம்   கற்கும்போது      மேற்கொள்ளல்
வேண்டுமேயன்றி,   பாட்டை   நுகரும்போது    மேற்கொள்ளல்
ஆகாது1.நடிகரின்   உயரம்   எடை நிறம் வயது பழக்கவழக்கம்


     1. Further explanation are but a distraction,  unless
we are merely using the  poem as a gravel pit  for the
extraction of grammer,   philologhy, mythology or  what
other ever fragments of   various   sciences   may be
discoverable in it. -S.J.Brown, The Realm of Poetry,p.163.