முதலியவற்றை அறிய முயலலாம்; ஆனால் நாடகம் காணும்போது அந்தஆராய்ச்சியில் ஈடுபடுவது தவறு ஆகும்.அதுபோல், பாட்டுக கலையை நுகரும்போது மற்றத் துறைகள் ஒதுக்கப்படல் வேண்டும். புலவரின் உள்ளத்திற்கும் படிப்பவரின் உள்ளத்திற்கும் குறுக்கே எந்தத் தடையும் நேராமல் காத்தல் வேண்டும்; புலவருடைய உணர்ச்சிப் பாய்வதற்கு உள்ளத்தைத் திறந்து காத்திருத்தல் வேண்டும்1. செவி உணர்க ஒலிநயம் உணர்ச்சியால் அமைந்தது; உணர்ச்சியை ஒழுங்கு படுத்த விளங்குவது; புலவரின் உள்ளத்து உணர்ச்சியிலிருந்து பிறந்தது; நம் உள்ளத்து உணர்ச்சியை ஒழுங்குபடுத்தக கருவியாக இருப்பது. ஆகவே உணர்ச்சி ஒழுங்குபட்டவுடன் ஒலிநயம் படிப்பவர்க்கு இயல்பாகிவிடல்வேண்டும். ஒலிநயமும் உணர்ச்சியும், தாளமும் இசையும் போன்றவை. எங்கிருந்தோ பறை ஒலி கேட்டதும் இங்குள்ள சிறுவன் அதற்கேற்ப அசைந்தாடுகிறான். எங்கிருந்தோ முழவொலி கேட்டதும் திண்ணைமேல் உள்ள இளைஞனுடைய கை தாளம் போடுகிறது. அவை எப்படி இயற்கை யால் நடைபெறுகின்றனவோ, அப்படி உணர்ச்சியும் ஒலிநயமும் ஒன்றுபடல் வேண்டும்.அதற்கு வழி என்ன? பாட்டை எப்போதும் வாய்விட்டுப் பாட வேண்டும்; அதன் ஒலிநயம் விளங்கப் பாடவேண்டும். ஏன் எனில், பாட்டு ஒரு கலை; கண்ணால் நுகர்தற்கு உரிய ஓவியம் சிற்பம் போன்ற கலையன்று; செவியால் நுகர்தற்கு உரிய இசை போன்ற கலை. 'செவி நுகர் கனி' என்றே பாட்டுச் சிறப்பிக்கப் படுதலை உணர வேண்டும்.ஆகவே பாட்டின் ஒலிநயத்தைச் செவி உணருமாறு வாயால் பாடவேண்டும் இதற்கு ஓரளவு பயிற்சியும் தேவை. பயிற்சி பெற்ற பிறகு தயக்கமோ தடுமாற்றமோ இல்லாமல் பாடி நேரே புலவரின் உணர்ச்சியில் ஒன்றுதல் வேண்டும். அச்சுப் பொறி ஏற்பட்ட பிறகு, இலக்கியத்தைக் கண்ணால் நுகரும் பழக்கம் மிகுந்து, இலக்கிய நுகர்வில் குறை ஏற்பட்டு விட் டது என்று புச்சர் என்ற பேராசிரியர் கருதுகிறார். சொற்களைக் 1. To enter imaginatively into the poet's mood, one must lay aside the critical, and adopt the receptive attitude. We must surrender ourselves to the poet; mood, -Ibid. p. 166. |