பக்கம் எண் :

நுகர்தல் 241

Untitled Document

கேட்டு  உணரும்  திறன் முற்காலத்தில் மிகுந்திருந்தது என்பதும்,
அச்சு நூலில்   கண்டுகற்கும் பழக்கம் மிகுந்த பிறகு சொற்களுக்கு
உள்ள ஒலி நயத்தை  நன்கு  உணரத் தவறிவிட்டோம் என்பதும்,
நுகரத் தக்க   இன்பத்தைப்  படிப்படியே செவி இழந்து வருகிறது
என்பதும் அவருடைய   கருத்துகளாகும். செவியின் தொழிலையும்
கண்ணே செய்யுமாறு  விட்டுவிட்டது  தவறு என்றும், செய்யுளின்
ஒலியினிமையை அகச்செவி மட்டும் உணர்வது போதாது என்றும்
வாயால்   ஒலிக்கக்   கேட்காத   சொற்கள்  கண்ணால் படித்து
உணரப்படும்   போது பாதி   உயிர்த்தன்மை இழந்து நிற்கின்றன
என்றும் அவர் கருதுகிறார்1.

ஆறுநிலைகள்

     பாட்டு,   படிப்பவரின்  அனுபவமாகும்   முறையை ஆறு
நிலைகளாகப் பிரித்துக் காட்டுகிறார் அறிஞர் ரிச்சர்ட்ஸ்2.

     1. பாட்டின் சொற்கள்  நூலிலிருந்து கண்வாயிலாக மூளைக்
குச் செல்லுதல் (அல்லது,  வாயால் பாடும்போது சொற்கள் செவி
வாயிலாகச் செல்லுதல்); இது முதல் நிலை.

     சிலர் தாம்   வழக்கமாகப் படித்துப் பழகிய அதே புத்தகத்
திலிருந்து ஒரு   பாட்டைப்   படித்தால்தான்  அதற்கு   உரிய
அனுபவத்தைப் பெற முடிகிறது. புதிய    பதிப்பாகவோ, பழகாத
புத்தகமாகவோ இருந்தால் தடுமாற்றம்  ஏற்படுகிறது.  சில பாட்டு
களை ஒருவர் பாடக் கேட்டுப் பழகிய  செவி, மறுபடியும் அந்தப்
பாட்டின் அனுபவத்தை முழுதுமாகப்  பெற விரும்பும்போது, முன்
பாடிய அவருடைய குரலாலேயே கேட்க   விரும்புகிறது. புதியவர்
ஒருவரின் குரலால் கேட்டால்,  மனம்   நிறைவு கொள்வதில்லை.
இவற்றிற்குக்   காரணம்,  இந்த முதல் நிலை பாட்டின் அனுபவத்
தோடு இயைந்திருப்பதே ஆகும்.
      2. கண்ணால்   கண்டு   உணர்ந்த    (செவியால் கேட்டு
உணர்ந்த)   சொற்களுக்கு     உரியபொருள்களின் உருவங்களை
மனம் உணர்தல்: இது இரண்டாம் நிலை.


     1. Prof. Butcher, Hardward Lectures, pp.299,230.
     2. I.A.Richards, Principles of Literary Criticism p.117