பக்கம் எண் :

நுகர்தல் 245

Untitled Document

தெரியாமலிருப்பதும்   ஒரு   வகையில் நன்மையே என்று டக்கர்
என்பவர் கூறியுள்ளார்1.

வளைவும் திரிபும்

     அறிவியலில்   சொற்களைக்  கொண்டு  நேரே பொருளை
அறிவது போல்   அல்லாமல்,   பாட்டில் சொற்களுக்கு அப்பால்
கிடக்கும் உணர்ச்சியை எட்டிப் பிடிக்க முயலுதல் வேண்டும்.

      வாழ்க்கை நேராக அமைந்தது போலவும், கலை வளைந்து
வளைந்து   அமைந்தது   போலவும்   தோன்றும், வாழ்க்கையே
அழகுபடத் திரிந்து கலையாய்  அமைவதால் இத்தகைய வளைவு
உள்ளது   என்றும்   கூறலாம். இங்கு வளைவு என்பது இன்னது
என்று   தெளிவாக   விளக்க   இயலாதது.  ஒவ்வொரு வகைக்
கலையிலும்   அழகுக்காக   அமைந்துள்ள  திரிபையே வளைவு
என்று   குறிப்பிடலாம்.  பாட்டு என்னும் கலையிலும் அத் திரிபு,
சொற்களின்     அமைப்பிலும்   சொற்பொருள்   அமைப்பிலும்
புலனாகிறது.

      பாட்டில்      சொற்களும்   சொற்பொருளும்   திரிந்து
அமைவதற்குக்   காரணம்,    புலவர் வேண்டுமென்றே செய்தல்
அன்று. புலவர்  உணர்ச்சி வயப்பட்டு நிற்றலேஅதற்குக் காரணம்
ஆகும்.  உணர்ச்சி மிக்க நிலையில், ஒரு வாக்கியத்தில் சொற்கள்
அமையும் இடம் மாறிவிடக் காண்கிறோம்.

       தக்க வேளையில் நீ எனக்கு உதவி செய்தாய்

     என்று  நேரே சொல்லத் தக்க வாக்கியம், உணர்ச்சி மிக்க
நிலையில்,

      உதவி செய்தாய் தக்க வேளையில் எனக்கு நீ
     நீ செய்தாய் உதவி தக்க வேளையில் எனக்கு
     எனக்குத் தக்க வேளையில் நீ உதவி செய்தாய்


     1. We do not know who    Homer was, or when he
lived or   whether   he   was a  model man and citizen.
But that ignorance is  rather a   blessing than otherwise.
We are left the more free  to contemplate the sculpture
or the poetry in and for itself.  Its effect is its own and uncorrupted.

      -T.G. Tucker,  The Judgement and Appreciation of
Literature p.26.