என்பதுதான் உணர்ச்சியுள்ள தாயின் மொழியாகும். அந்த உணர்ச்சி படிப்படியே வளர்ந்து மிகும்போது, மணியைப் பற்றியும் பையனைப் பற்றியும் உள்ள சொற்கள் எல்லாம் போய், வேறு சொற்கள் வந்து அமையும். பொழுது போச்சே,இன்னும்காணோமே என்று நேரே பொருள்களைச் சுட்டாமல் வேறு வகையில் பேச்சு அமையும். இன்னும் உணர்ச்சி மிகுமாயின், எல்லோரும் வந்துவிட்டார்களே, எப்போதோ வந்துவிட்டார்களே என்று யாரைப் பற்றிய பேச்சாகவோ அமையும். தாயின் எதிரே நின்று, அவருடைய உணர்ச்சி இன்னதென்று தெரிந்துகொள்ளக் கூடியவர்களுக்கே, அது மகன் வராதது பற்றிய கவலை என்பது விளங்கும். மணி ஒன்பதாகியும் என் கணவர் வராத காரணம் என்ன என்பது அறிவு நிலையில் நின்று எண்ணும் மனைவியின் மொழி, அவளே கவலை மிகுந்து உணர்ச்சி வயப்பட்டுக் கூறும்போது, எல்லாரும் வந்துவிட்டார்களே,ஊர்அடங்கிவிட்டதே என்பாள். இந்தப் பேச்சில் கணவரைப் பற்றிய குறிப்பும் இல்லை. அவர் வராததைப் பற்றிய கவலையும் இல்லை. ஊராரைப் பற்றிப் பேசுவது போல் வாக்கியம் அமைந்திருக்கிறது. நேரே எண்ணத்தைக் கூறாமல், இவ்வாறு திரிபு அமையக் கூறுவதற்குக் காரணம், உள்ளத்தின் உணர்ச்சி மிகுதியயே ஆகும். "கதிரவன் மறைந்த அகன்ற வானத்தில் பறந்து செல்கின்றன இப்பறவைகள். தங்கள் குஞ்சுகளின் வாயினுள் வைத்து ஊட்டுவதற்காகத் தம்வாயில் இரை எடுத்துக் கொண்டிருந்ததால் விரைவாகப் பறக்கின்றன" என்னும் பொருளுடைய பழைய பாட்டு ஒன்று உள்ளது. ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை...
|