பிள்ளை உள்வாய்ச் செரீஇய இரைகொண் டமையின் விரையுமால் செலவே1. இப்பாட்டு என்ன கருத்து உடையது என்பதே எளிதில் விளங்காதவாறு திரிபு அமைந்துள்ளது. சொற்கள் பொருள் தருகின்றன;ஆயினும் கருத்து விளங்கவில்லை. பிரிவாற்றாத காதலி ஒருத்தி மாலைப் பொழுதைக் கண்டு வருந்திக் கூறுவது என்று தெளிந்த பின், பாட்டைப் படித்தால், அந்தப் பாடிய புலவரின் கற்பனை யுணர்ச்சியை நாமும் பெறமுடியும். குழந்தை மனம் கவிஞர் என்பவர் குழந்தைப் பருவத்தின் பார்வை பெற்று இன்னும் உலகத்தை நோக்க வல்லவராக இருப்பவரே என்பர். மனிதராக வளர்ந்த பிறகும் குழந்தைத் தன்மையை இழக்காமல் காத்து வருபவரே கவிஞர் என்கிறார் எமர்சன்2 குழந்தைப் பருவத்தில்தான் கற்பனை மிகச் பிறந்திருக்கிறது என்றும், புலவர் எவ்வாறு உணர வேண்டும் என்று விரும்பி முயல்கிறாரோ, அவ்வாறு உணர்வது குழந்தைக்கு இயற்கையாக அமைந் திருக்கிறது என்றும் பிரெஸ்காட் என்பவர் கூறியுள்ளார்3. அத்தகைய குழந்தையுள்ளத்தைத் திரும்பப் பெற்றால் கலையின்பத்தோடு பாட்டைப் படித்தல் எளிதாகும். குழந்தையுள்ளம் இருந்தால் கலையுணர்ச்சியும் எளிதாக அமையும்; கற்பனையும் வளமாக அமையும்4. 1. குறுந்தொகை, 92 2. "The poets are men who still see with the eyes of childhood" -F.C. Prescott, The Poetic Mind.p.59. "The lover of Nature is he whose inward and outward senses are still truly adjusted to each other; who has retained the spirit of infancy even into the era of manhood; - Nature, chap.1 3. In man's life, the time imagination par excellence is childhood. Every Child thinks naturally in the way in which the poet must try to think later - F.C. Prescott. The Potic Mind. p.54. 4. If poetry is to deliver its true message to a man< something must surely remain to him of the spirit of childhood-its clear vision of things as they are its wonderment, its frank acceptance of joy. |