பாட்டின் உணர்ச்சியையும் கற்பனையையும் எளிதில் பெற்று மகிழ்தலும் கூடும. பல பாட்டுகளில் இன்று உணர்ச்சியைப் பெற முடியாமல் தடுமாறுவதற்குக் காரணம்,பாட்டைக் குழந்தையுள்ளத் தோடு அணுகாத குறையே ஆகும். குழந்தையின் வாழ்க்கையில், உணர்ச்சி சிறந்து விளங்கும் அளவிற்கு அறிவு இடம் பெறுவ தில்லை. அறிவு அடியோடு இல்லாமற் போவதில்லை. அது கருத்துகளுக்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது. ஆனால கற்பனையுள்ளத்தோடுஉணர்ச்சி வயப்படும்போது, அறிவு தலை யிடுவதில்லை. பாட்டைப் பாடும் புலவரின் மனமும் பாட்டின் உணர்ச்சியில்ஈடுபட்டுள்ளபோது அதே நிலையில்தான் உள்ளது. ஆதலின், பாட்டை நுகர்வோர், பகுத்தறிவுக்கு முதலிடம் தரல் ஆகாது; பாட்டில் நிறையக் கருத்துகளை எதிர்ப்பார்த்தல் கூடாது*. அவ்வாறு எதிர்பார்த்தல் பாட்டின் உண்மைப் பயனைப் பெற முடியாமற் போகும் அந்த ஏமாற்றத்தின் பயனால், பாட்டைப் பற்றியே தவறான கருத்து ஏற்படும்; அதன் அதன்உண்மை மதிப்பும் தெரியாமற் போகும். காதலி வாழும் வீட்டின் தோட்டத்தில்வேங்கை மரம் ஒன்று உள்ளது. காதலன் இரவில் காதலியைக் காணச் செல்லும் போதெல்லாம்அந்த வேங்கை மரத்தின் அடியில் நிற்பது வழக்கம். அங்கே அவன்நிற்பதை உணர்ந்து காதலி வந்து கண்டு பேசுவதும் வழக்கமாகிவிடுகிறது. இவ்வாறு அவர்களின் காதல் வளர்ந்து வரும்போது, எதிர்பாராத வகையில் காதலன் ஒரு கடமையை முன்னிட்டு வெளிநாட்டுக்குச்செல்ல நேர்கிறது. இன்னும் இரண்டு திங்களுக்குள் திரும்பிவருவதாகக் கூறிவிட்டுச் செல்கிறான். Its simple faith in goodness and love, with nothing of worldiness, nor disillusioment nor cynicism - the poison of poetry. Without such a spirit he may have from poetry all the joy a critic finds in a work that is faultless in technique. But that is not poetry's authentic message its true messagewill be breathed only into the ears of a child.
-S.J. Brown, The Realm of Poetry. p.186 * Misunderstanding and under-estimation of poetry mainly due to over-estimation of the thought in it. -J.A. Richards, Science and Poetry.p.25. |