பக்கம் எண் :

நுகர்தல் 251

Untitled Document

குழந்தைக்கு   இயல்பாக   இருக்கிறது.  கலைஞர் அந்த அறியா
மையை   வேண்டும்போது   பெற்றுக்  குழந்தைத் தன்மை பெறு
கின்றனர்; கற்பனை மனம் பெறுகின்றனர்.

பயின்றுஉணர்க

     முடிவாகப்   பாட்டைப் படித்து நுகரும் முறையில் உணரத்
தக்க உண்மை ஒன்று; கலைஞர்க்கு உள்ள அவ்வளவு கற்பனைத்
திறனும்   உணர்ச்சி  வளமும் மற்றவர்களுக்கு இல்லாவிட்டாலும்.
ஒவ்வொருவர்க்கும்  ஓரளவு கற்பனையும்  உணர்ச்சியும் உள்ளன.
அதாவது,   கலைஞர்க்கு   மிக்க   அளவில்   உள்ள  அவை,
மற்றவர்க்குச்   சிறு   அளவிலேனும்உள்ளன;  ஒவ்வொருவரின்
உள்ளத்திலும்  கலையின் வித்து உள்ளது. அதனைக்  கொண்டே
கலைஞரின்   படைப்பை நுகர   முடியும்.   நம்   உள்ளத்தில்
ஒளிந்துள்ள  கலைத்  திறனைக்  கொண்டே பெரிய கலைஞரின்
செல்வங்களை  நுகர   முடியும்.   இவ்வாறு  அல்லாமல், வேறு
எத்தனை திறமை இருந்த போதிலும், அறிவுக்கூர்மை சிறந்திருந்த
போதிலும்   கலைச்  செல்வத்தால்   பயன்    பெறல் முடியாது.
தொடக்கத்தில்   கலையுணர்ச்சி   மிகச்  சிறிய அளவில் இருந்த
போதிலும்   பயிற்சியால்   அதை  வளர்த்துக் கொள்ள முடியும்.
நாள்தோறும்   சில   பாட்டுகளைப்  படித்துவருவதன் வாயிலாக
அதைப் பண்படுத்திக்   கொள்ள முடியும். உரைநடையில் உள்ள
கதை நாடகம் முதலியவற்றை ஓரிருமுறை படித்தால் பயன் பெறல்
இயலும். பாட்டை    ஓரிருமுறை  படித்தால் போதாது. திரும்பத்
திரும்பப் படித்தால்   பயன் மிகுந்துவரும். பாட்டின் ஒலிநயத்தில்
நம் செவி   மீண்டும்   மீண்டும்   ஈடுபட்டுப்   பழக வேண்டும்.
அப்போதுதான்   அதன்   உணர்ச்சியையும் கற்பனையையும் நம்
உள்ளம்   சொந்தமாக்கிக் கொள்ள முடியும். பாட்டைப் படித்துப்
படித்துப்பாராட்டுவதன்   வாயிலாக மேலும் பாராட்டும் திறனைக்
கற்கிறோம் என்றும்,   நுகர்ந்து நுகர்ந்து இன்புறுவதன் வாயிலாக
மேலும் இன்புறும்   முறையைக்   கற்கிறோம்  என்றும் அறிஞர்
ஹட்சன்   கூறியது காண்க1. இவ்வாறு நன்றாகப் படித்து நுகரக்
கற்றவர்   பெரும்   பேறு   பெற்றவர்;  அவர் பெறும் இன்பம்
இலக்கியத்தை   நுணுகி   ஆயும் ஆராய்ச்சியாளர்க்கும் இல்லை
எனலாம்.


1. The we learn to appreciate through appreciation
  and to enjoy through enjoyment, -W.H. Hudson,
  An Introduction to the Study of Literature p.127