அறிவு தூங்குக அறிவு நிலையில் ஊன்றி நின்றபடியே இத்தகைய கற்பனைகளை நுகர்தல் இயலாது. அறிவு ஒருவகையில் இவற்றிற்குத் தடையே ஆகும். கனவு காண்பதற்கு நனவுலகம் தடையாக இருத்தல் போல், கற்பனையை நுகர்வதற்கு அறிவு தடையாகிறது. ஆகவே அறிவை மெல்லத் தூங்கச் செய்து கற்பனையுலகத்திற்குப் பறந்து செல்ல வேண்டியுள்ளது. குழந்தை உறங்குவதற்குத் தாலாட்டு இசையோ அல்லது மெல்லத் தட்டும் முறையோ துணையாய் இருப்பது போல் பாட்டின் கற்பனையில் திளைப்பதற்கு அதனுடைய ஒலிநயமும் அமைப்பும் துணை செய்கின்றன. ஒவ்வொரு கலைத் துறையிலும் கற்பனை இன்பம் பெறுவதற்காக மனம் என்னும் குழந்தைக்கு இத்தகைய தாலாட்டுத் தேவையாக உள்ளது. அந்தத்துணை பெறாமல் கலையின்பம் பெற முயல்வது வீண் முயற்சி ஆகின்றது.சில இடத்தில் போராட்டமாய் இருக்கும். உறங்க இயலாமல் தொட்டிலில் கிடந்து அழுதுபோராடும் குழந்தைபோல் அறிவு நிலையில் நின்றே கற்பனையை நுகரமுடியாமல் பாட்டுக் கலையுடன் போராடுதலும் உண்டு. அறிவுவளர்ச்சிக்கு உரிய புதுக் கருத்துகளை விரும்புவோர் பாட்டை நாடுவதில் பயன் இல்லை. இதற்கு முன் அறிந்திராத வற்றைப் பற்றி அறிவிக்கும் என்று தாம் உரைநடையை நாடுவ தாகவும், முன்பே அறிந்தவற்றைப் பற்றி உணர்த்தும் என்றே பாட்டை நாடுவதாகும் லியான் என்ற ஆசிரியர் குறித்துள்ளார்1. ஆகவே, பாட்டின் சிறந்த அறிவை எதிர்பாராமல், விழுமிய உணர்ச்சியனுபவத்தை எதிர்பார்த்தலே அதனால் பயன் பெறுவதற்குரிய முறையாகும். மனஅரங்கு காவியம், நாடகம், கதை முதலியவற்றைப் படிக்கும்போது, புலவர் அவற்றில் படைத்த மாந்தரை நம் மனக்கண்ணில் காண வேண்டும்.அவர் படைத்த அந்தப் பண்புகளே உடைய மாந்தராக, 1. Sir Walter Raleigh once said that he looked to rose to tell him something he did not know before, to poetry, to tell him something he knew already. - P.H.B. Lyon, The Discovery of Poetry.p. 129. |