பக்கம் எண் :

ஆராய்ச்சி 259

Untitled Document

      குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
     கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
     வழூஉச்சொல் புணர்த்தல் மயங்க வைத்தல்
     வெற்றெனத்தொடுத்தல் மற்றொன்று விரித்தல்
     சென்றுதேய்ந்து இறுதல் நின்றுபயன் இன்மை
     என்று இவை ஈரைங் குற்றம் நூற்கே

     கருத்தை விளக்கத்தக்க அளவுக்கு  விளக்காமல் குறைபடக்
கூறுதல் அளவுக்குமேல் கூறுதல்,  கூறியதே திரும்பவும் கூறுதல்,
முன்   கூறியதற்கு   மாறாகக்   கூறுதல், குற்றமான சொற்களை
அமைத்தல்,தெளிவு இல்லாமல் மயங்குமாறு கூறுதல், பொருளற்ற
சொற்களை அமைத்தல்,   எடுத்தபொருள் அல்லாமல் வேறொரு
பொருளை விரிவாகக்   கூறுதல், விரிவாகத் தொடங்கிப் போகப்
போகச் சுருக்கி முடித்தல்,  சொற்கள்   இருந்தும் பொருட்பயன்
இல்லாமற்  போதல்  ஆகியவற்றைக்   குற்றங்கள் என நீக்கிய
முறை போற்றத் தக்கதாகும்.

     இக்     குற்றங்களைச்     சிதைவு   எனக் குறிப்பிடுவர்
தொல்காப்பியனார்

      சிதைவெனப் படுபவை வசையற நாடின்
     கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
     குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
     பொருளில மொழிதல்மயங்கக் கூறல்
     கேட்போர்க்கு இன்னா யாப்பிற்று ஆதல்
     பழித்த மொழியான் இழுக்கம் கூறல்
     தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்
     என்ன வகையினும் மனங்கோள் இன்மை
     அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும்*

அழகு பத்தாவன;

      சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
     நவின்றோர்க்கு இனிமை நன்மொழி புணர்த்தல்
     ஓசை யுடைமை ஆழமுடைத் தாதல்
     முறையின் வைப்பே உலகமலை யாமை


     * தொல்காப்பியம், பொருள், மரபியல், 109