பக்கம் எண் :

26இலக்கியத் திறன்

Untitled Document

சிற்பம், கல் மண் மரம் உலோகம் முதலியவற்றால் அமைவது;
கண்ணால்   காண்பதற்கும்  உற்று  அறிவதற்கும் உரியது; அகலம்
நீளம் கனம் என்னும் மூன்று அளவுகள் உடையது.

     இசை ஒலியால்  அமைவது; செவியால் உணர்வதற்கு உரியது;
அகலம் நீளம் கனம் என்னும் அளவுகள் பெறாமல் காலம் என்னும்
அளவு மட்டும் பெறுவது

     இலக்கியமும்    ஒலியால்   அமையும்  கலையே; ஆயினும்
இலக்கியத்தில்   வழங்கும்   ஒலி   பொருளுடைய   சொற்களால்
ஆகியது.   ஆகவே,   இலக்கியம்  சொற்களால் அமைவது எனல்
வேண்டும்.   இலக்கியத்தின்   வகைகளுள்  சிறந்ததாகிய   பாட்டு
(கவிதை)   என்பது    இசையின்   இயல்பும்  கூடியது.   இதுவும்
செவியால்  உணர்வதற்கு  உரியது; காலம் என்னும் அளவு மட்டும்
உடையது.

     நாட்டியம்    உடம்பின்   அசைவுகளாலும்  குறிப்புகளாலும்
அமைவது;   கண்ணால்   உணர்வதற்கும்  உரியது;  நான்கு வகை
அளவுகளும்    உடையது.   பெரும்பாலும்   தனித்து   நிற்காமல்
இசைக்கலையோடு கூடி இயல்வது.

     நாடகம்     பெரும்பாலும்    உடம்பின்   அசைவுகளாலும்
சொற்களாலும்   அமைவது;  மற்றக்   கலைகள்  எல்லாம் கலந்து
இயல்வது; கண்ணாலும்  செவியாலும் உணரத்தக்கது; நான்கு வகை
அளவுகளும் உடையது.

பாகுபாடு

     காலம்   என்னும்  அளவு  இல்லாத ஓவியம் சிற்பம் ஆகிய
கலைகள் நிலைக்கலைகள்(Static arts) எனப்படும். காலம் என்னும்
அளவு   உடைய   இசை  முதலிய  கலைகள்  இயங்கு கலைகள்
(dynamic  arts) எனப்படும்.

     ஓவியம்,   சிற்பம்,   நாடகம்  ஆகிய கலைகள் ஒன்றனைப்
போலச்      செய்யப்படுபவை    ஆகையால்,   ஒப்புமைக்கலை
(representative of mimetic arts) என்று குறிக்கப்படும்.
     இசை   தவிர   மற்றக்    கலைகளில்   உணர்ச்சி கற்பனை
என்பவற்றோடு கருத்தும்  ஓரளவு கலந்து நிற்கும். இசைக் கலையில்
மட்டும்   கருத்துக்கு    இடம்    இல்லை.   இசை என்று இங்குக்