பக்கம் எண் :

ஆராய்ச்சி 263

Untitled Document

புலமைத்   திறனைப்   பற்றிப்  பேச முன் வந்துள்ளேன்" என்று
தொடங்குவது வழக்கம். அதை விட,"யான் இன்று என்னைப் பற்றி
கம்பரைப்   படித்த  என்னைப் பற்றிப் - பேச முன்வந்துள்ளேன்"
என்று   தொடங்குவது பொருந்தும்.  அவ்வாறு கூறுவது மரபுக்கு
மாறாக இருந்தாலும்,  அதுதான்  உண்மையும் நேர்மையும் ஆகும்
என்கிறார்.

      உலகத்து      அறிவிலும்,   கருத்திலும்   சிறந்தவற்றைத்
தேர்ந்தறிவதற்கும்   பரப்புவதற்கும்   உரிய  பற்றற்ற முயற்சியே
ஆராய்ச்சி என்பது இங்குக் கருதத் தக்கது1.

      ஆயினும்,   பெரும்பாலோர்க்கு   அத்தகைய    பற்றற்ற
நடுநிலையான ஆராய்ச்சி மனப்பான்மை வாய்ப்பதில்லை. மில்டன்
எழுதிய,   'இழந்த துறக்கம்' என்னும் நூலை வால்டேர்  என்பவர்
அளவு கடந்து தூற்றினார்;ஆனால் மெக்காலே என்பவரோ அளவு
கடந்து போற்றினார்.   தூற்றிய  வரும் அறிஞரே; போற்றியவரும்
அறிஞரே. தமிழிலக்கியத்   துறையிலும்,  சிலர்   மிகத்  தூற்றும்
நூல்களையே வேறு சிலர்மிகப் போற்றுதல் காணலாம்.இருசாராரும்
ஆராய்ச்சியில் ஆர்வம் உடையவர்களே. இந்நிலைக்குக் காரணம்
என்ன? பற்றற்ற   நடுநிலைமை என்பது   எய்தற்கு அரிய நிலை.
அனடோல் பிரான்ஸ் கூறுமாறு2,ஆராய்ச்சி   என்பது ஒருவரின்
மிகத் தனிப்பட்ட   சொந்தச் செய்தியாக  உள்ளது. அவருடைய
சொந்த வாழ்வும்   நம்பிக்கைகளும்  அவருடைய ஆராய்ச்சியில்
தெற்றென விளங்குகின்றன.

     ஒரு நூலைக்   கற்கும்போது,   அதனுடைய    பலவகைச்
சிறப்புக்களையும்   உணர்ந்தபோதும்,  அதனிடையே உள்ள ஒரு
கருத்து அல்லது ஆசிரியரின் ஒரு கொள்கை நமக்கு மாறானதாக
இருக்கும் காரணத்தால்,    வெறுப்பையே   கொண்டு    நூலை
மதிப்பிடுதல் உண்டு.   விருப்பைவிட  வெறுப்பு  ஆற்றல் மிக்க
உணர்ச்சி ஆகையால், அது நம்   ஆய்வுத்  திறனையே மங்கச்
செய்துவிடும்; நம்மை  அறியாமலே நம் நடுநிலைமை மாறிவிடும்.
அதனால், "இந்நூல்  உயர்ந்ததுதான்; என கொள்கைக்கு மாறான
கருத்து ஒன்று   இந்   நூலில்  உள்ளபோதிலும். இது உயர்ந்த


     1. J.C. Shairp, Aspects of poetry, p.41
     2. J.M. Murry, Discoveris, p.13