| பொதுவாய் நிற்றல் ஆராய்ச்சியாளன் கூரிய அறிவு வாய்த்து, பிறர்பிறர் மனநிலையை அறிய வல்லவனாக இருத்தல் வேண்டும். தான் கொண்டதே கொள்கை என்று விடாப்பிடியாக இராமல் நெகிழ்ந்து, பிறர்கொள்கைகளையும் அவற்றின்காரணங்களையும் ஆராய வல்ல நுண்புலன் உடையவனாக இருத்தல் வேண்டும். பிறர் கூற்றில் உள்ள அடிப்படைக் கருத்துகளை எளிதின் உணரும் திறனும், அவற்றைத் தெளிவாக எண்ணிப் பாகுபாடு செய்யும் ஆற்றலும் பெற்றிருத்தல் வேண்டும். தன் விருப்பு வெறுப்புகளுக்கு முதல் இடம் தந்து கொடுக்காமல், பொறுமையுடன் பிறர்பிறர் விருப்பு வெறுப்புகளை ஆராய்ந்தறிய வல்லவனாக இருத்தல் வேண்டும்1. ஆகவே, ஆராயும் துறையில் நடுநிலையில் நின்று உண்மை காணும் ஆர்வம் வேண்டும். தான் கற்ற கல்வியினாலோ, பிறந்து வளர்ந்த சூழ்நிலை அமைப்பினாலோ, தழுவிய சமயக் கொள்கையினாலோ, சாதி வகுப்பு கட்சி நாடு முதலான வேறுபாடுகளினாலோ ஒரு சார்பாக நிற்காமல், பொதுவான மனிதத் தன்மையோடு எதையும் நோக்க வல்ல பெருந்தன்மை வேண்டும். திருவள்ளுவர் நடுவுநிலைமை என்ற அதிகாரத்தில் கூறியுள்ள ஒரு கருத்து ஆராய்ச்சியாளர்க்கு மிகப் பொருந்துவாக உள்ளது. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி.2 துலாக்கோல் போல் பற்றற்ற (சம) நிலையில் நின்று மதிப்பை 1. The true critic must be mentally alert add flexible keen in insight quick in response toall impressions. strong in grasp of essentials; he must. moreover be able to see a thing as it realy is, and not distored through a mist of his own idiosyncracies and prepossessions; which means that he must be entirely disinterested and free from bias of all kinds-bias of individual tastes, bias of education, bias of creed, sect, party, class nation. -W.H. Hudson, An Introduction to the Study of Literature, p.282. 2. திருக்குறள், 118 |