| அளந்து கூறல் வேண்டும்; ஆராய்ச்சிக்கு உரிய தகுதி அமைந்து ஒரு சார்பாகக் கோணாமல் இருத்தல் வேண்டும். ஆராய்ச்சிக்கு உரிய தகுதி, பற்றற்ற நிலை, ஒரு சார்பாகக் கோணாமை, மதிப்பை அளந்து கூறும் நோக்கம் இந்நான்கும் அமையப் பெற்றவரே ஆராய்ச்சியாளர். மூன்று தகுதி ஆராய்ச்சியாளர்க்கு உரிய தகுதியை மூன்றாகக் கூறுகிறார் ரிச்சர்ட்ஸ்:- (1) தாம் ஆராயும் இலக்கியத்திற்கு ஏற்ற மன நிலை பெற்று, அதன் அனுபவத்தைப் பெறுவதில் தேர்ச்சி மிக்கவராக இருத்தல் வேண்டும்;விருப்பு வெறுப்புக்களின் எல்லைகளில் நின்று மனம் போன போக்கில் செல்லும் குறை இருத்தல்கூடாது (2) தாம் பெறும் அனுபவங்களின் ஏற்றத் தாழ்வை அறிந்து வேறுபடுத்த வல்லவராக இருத்தல் வேண்டும். (3) அவற்றின் மதிப்பை அளந்து கூற வல்லவராக இருக்க வேண்டும்1. இத்தகுதிகளில் முதலாவதாகிய இலக்கிய அனுபவங்களைப் பெறுதல் என்பது, இலக்கியத்தை நுகர வல்லவர்க்கே அமையும். ஆகவே, ஒரு பாட்டை ஆராயப் புகுவோர், அதன் ஆசிரியர் பெற்ற உணர்ச்சி யனுபவத்தைத் தாமும் பற்று மகிழப்பயிற்சி பெற வேண்டும்.நுகரும் திறன் பெறாத எவரும் இலக்கிய ஆராய்ச்சியில் தலையிடுவதில் பயன் இல்லை என்பது தெளிவு. இரண்டாவதாகிய ஏற்றத் தாழ்வுகளை அறிந்து வேறுபடுத்தல் என்பது. நடுநிலையான-விருப்பு வெறுப்பற்ற அல்லது, விருப்பு வெறுப்புக் குறைந்த)- மனம் உடையவர்க்கே அமையும். அவர் தம் கொள்கை சமயம் முதலியவற்றையும் நூலாசிரியரின் கொள்கை சமயம் முதலியவற்றையும் மறந்து (பொருட்படுத்தாமல் விட்டு) நூலின் சிறப்பான பகுதிகளையும் சிறப்பற்ற பகுதிகளையும் மட்டும் ஆராய்தல் வேண்டும். தாம் 1. The qualifications of a good critic are three. He must be an adept at experiencing, without eccentricities, the state of mind relevant to the work of art he is judging. Secondly he must be able to distinguish experiences from one another as regards their less superfical features.Thirdly he must be a sound judge of values. -I.A. Richards, Principles of Literary Criticism, p.114. |