| நம்பாத ஒன்றை நூலாசிரியர் நம்பலாம்;அந்த ஒரு காரணம் பற்றி நூல் முழுமையும் சிறப்பற்றது எனக் கொள்ளலாகாது. ஆசிரியர் தம் சமயத்தைச் சார்ந்தவராக, அல்லது, தம் ஊரைச்சார்ந்தவராக இருக்கலாம். அது பற்றி அந் நூலின் குறை காணாமல் கண்ணை மூடிக் கொள்ளலாகாது. ஒரு நூலை ஆராயும் போது அந்நூலாசிரியரிடம் நாம் கொண்டுள்ள விருப்பு வெறுப்புக்களை மறத்தல் எளிதன்று; ஒதுக்கி வைத்தல் இயலும். அவ்வாறு நம் விருப்பு வெறுப்புக்களை ஒதுக்கி வைத்து ஆராய்தல் வேண்டும். அவ்வாறு அல்லாமல். ஆசிரியரிடம் கொண்டுள்ள விருப்பு வெறுப்புக்களையோ,அவர் உணர்த்தும் சமயம் முதலியன பற்றிக் கொண்டுள்ள விருப்பு வெறுப்புக்களையோ முன்செல்லவிட்டு ஆராய்ந்தால், உண்மை காணல் இயலாது. ஆகவே என்ன சொல்கிறார், யார் சொல்கிறார் என்பன பற்றி விருப்புவெறுப்புக் கொள்ளாமல், உண்மை நாடும் நாட்டம் கொள்ளல் வேண்டும் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.1 மூன்றாவதாக, மதிப்பை அளந்து கூறுதல் என்பது. இலக்கியத்தின்பொருள் பற்றியும் வடிவு பற்றியும்தெளிவான அறிவு பெற்றவர்க்கே அமையும். இலக்கியத்தின் கற்பனை எத்தகையது, உணர்ச்சி எத்தகையது, அமைந்த சொற்களும் ஒலிநயமும் எத் தகையன என்பவற்றை ஆய்ந்து மதிப்பிடல் வேண்டும். ஆசிரியர் உணர்த்த விரும்பியதைத் திறம்பட உணர்த்தினாரா, அழுகுபட அமைத்தாரா என்று ஆய்ந்து காண வேண்டுமே அல்லால், தாம் விரும்பியதை உணர்த்தினாரா, அழகுபட அமைத்தாரா என்று ஆய்ந்து காண வேண்டுமே அல்லாமல், தாம் விரும்பியதை உணர்த்தினாரா, தாம் விரும்பாததை உணர்த்தினாரா என்று காணல்கூடாது. தாம் விரும்பாத ஒன்றையேஆசிரியர் உணர்த்திய போதிலும், அவர் உணர்த்திய முறையிலும் அமைத்த வடிவிலும் கலைப்பண்பும் திறனும் உள்ளனவா என்பதே ஆய்ந்து காணத்தக்கது. கற்பனை சிறப்புற அமைந்திருக்கலாம், வடிவம் நன்றாக அமைந்திருக்காது; வடிவம் திறம்பட அமைந்திருந்தும், உணர்ச்சியைப் புலப்படுத்தும் முறையில் குறை இருக்கலாம்; உயர்ந்தசொற்கள் அமைந்திருக்கலாம்,ஒலிநயம் குறை உடையதாக 1. திருக்குறள், 423 |