| இருக்கலாம். இவை போன்றவற்றை ஆராய்ந்து குணம் இன்னது, குற்றம் இன்னது என்று தீர்ப்புக் கூறும் திறன் வேண்டும். குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்1 கண்ட குணங்களைப் பாராட்டுவதில் மகிழ்ந்து குற்றங்களை மறத்தலோ, சில குற்றங்களைக் கண்டதும் வெறுப்புக் கொண்டு குணங்களைப் புறக்கணித்துச் செல்லுதலோ, இலக்கியத்தை மதிப்பிடுவோர்க்கு ஆகாது. பொறுமையுடன் குணம் குற்றங்களை ஆராய்ந்து சீர்தூக்கிக் கூறுவதே கடமையாகும் . கண்மூடிப் போற்றல் ஆராய்ச்சியில் தன் விருப்புவெறுப்புக்கள் மிகுதல் என்ற குறையோடு மற்றொரு குறையும் புக இடம் உள்ளது ஒரு நூலைப் பற்றித் தம் மனத்தில் பட்ட கருத்தை மட்டும் ஒருவர் கூறுவது இல்லை. பிறர் அந்த நூலைப் பற்றிக் கூறியுள்ள கருத்துகள் முன்னமே அவருடைய மனத்தில் படிந்துள்ளன ஆகவே, அந்த நூலைப் பற்றி முன்னமே உள்ள கருத்துகள் அவருடைய ஆராய்ச்சியை ஓரளவு உருவாக்குகின்றன. சிறந்த நூல் என்று பலரும் பலகாலமாக உடன்பட்டுப்போற்றி வரும் நூலை அவரும் அவ்வாறே போற்றத் தொடங்குகிறார். அது பெருமை உடையது என்ற கருத்தோடு நூலைப்பார்க்கிறார். அந்தக் கருத்தே அவரை மாற்றிவிடுகின்றது. ஆகையால், நூலின் குணங்குற்றங்களை நடு நிலையாக ஆராய்தல் முடியாமற்போகின்றது, குற்றங்கள் கண் ணுக்குத் தோன்றாமல் மறைகின்றன; தோன்றினும் அவை குண மாகவே தோன்றுகின்றன.அதனால் நடுநிலையான ஆராய்ச்சிக்கு இடம் இல்லாமற் போகின்றது, முன்னோர் அந்நூலுக்கும் நூலா சிரியர்க்கும் தேடி வைத்துள்ள புகழ் இவ்வாறு நம் ஆராய்ச்சிக் கண்ணை மூடாதவாறு காத்துக்கொள்ளல் கடமை யாகும். இது அரிது என்பது உண்மையே2 ஆயினும் இந்த அரிய திறன் உடையவர்களே உண்மையான இலக்கிய ஆராய்ச்சிக்கு உரியவர்கள். 1. திருக்குறள், 504 2. Sincerity in Literary Judgements is terribly hard to achieve. It is almost impossible to some small extent at least influenced by critical or common opinion what adds to the difficulty is that with regard to words of acknowledged greatness. |