பக்கம் எண் :

ஆராய்ச்சி 269

Untitled Document

வடிகட்டல்

     இத்தனையும்   வாய்ந்த  ஆராய்ச்சியாளரைக்  காண்பது
அரிதினும்   அரிது.    ஆயின்,  என்ன   செய்தல் வேண்டும்?
ஆராய்ச்சியாளர்   தம்மைத்   தாமே ஆராயும் திறன் பெறுதல்
வேண்டும். தம் விருப்பு வெறுப்புக்கள் இவை, தம் சமயம் கட்சி
முதலியன   இவை   என்று   தேர்ந்தறிந்து,   தம் ஆராய்ச்சி
எவ்வெவற்றால் நடுநிலையிலிருந்து பிறழக்கூடும். எவ்வெவற்றால்
உண்மையிலிருந்து   விலகக்கூடும்.  என்பவற்றை ஆராய்ந்தறிய
வேண்டும்.  அவ்வவற்றின்   சார்பை   அவ்வளவிற்கு   நீக்கி,
ஆராய்ச்சி முடிவுகளை வடிகட்டிக் கொள்ளல் வேண்டும்.

     அவ்வாறு ஆராய்ச்சியாளர் தம்மைத் தாமே ஆராய்வதன்
வாயிலாக,   ஒருவகைப்   பயிற்சியைப் பெறலாம். அத்தகைய
பயிற்சியைப் பெற்றவர்,   தம் மனத்தைத் தாமே ஆளும் திறன்
பெற்று, நடுநிலையான ஆராய்ச்சியாளராக விளங்க முடியும்.

     அத்தகைய ஆராய்ச்சியாளர்க்கும் விருப்பு வெறுப்புக்கள்
இருத்தல்   இயற்கை.  ஆனால் அவர் உண்மை காண்பதற்கும்
உண்மை   உரைப்பதற்கும்   விருப்பு  வெறுப்புகள் தடையாக
இருக்க  மாட்டா.  "இது நல்ல பாட்டு; ஆயினும் நான் விரும்ப
வில்லை" என்றும்,    "இது கலைத் தன்மை இல்லாதது; இந்தக்
கற்பனை பயனற்றது;  ஆயினும் இதை நான் விரும்புகின்றேன்"
என்றும் கூறவல்ல தெளிவு அவர்க்கு அமையும்.

பயிற்சி

       இலக்கிய  ஆராய்ச்சி இவ்வளவு அரிய முயற்சியுடைய
தாக இருந்ததால்தான், அனடோல் பிரான்ஸ் என்பவர், அதைப்
பற்றி எடுத்துரைக்கும்போது, 'நூலகத்திற்குச் சென்று தீரச்செயல்
புரிந்து வரும் ஒருவருடைய மனச்சான்றின் கூற்றுகள்"என்கிறார்1.

  இவ்வாறு ஆராயும் திறன் எளிதில் வருவது அன்று. இதற்குப்


     To try to read a poem witht the eyes of the first
reader   who  read it is like trying to she a landscape
without atmosphere that clothes is.
   -S. Somerset Maugham, A. Writer's Note book p.259

      1. Criticism is   confession of the adventures of
man's soul among book.
      J.M. Murry, Discoveries, p. 13