| பயிற்சியும் வேண்டும்; ஒழுங்குக் கட்டுப்பாடும் வேண்டும் பலகாலம் ஒழுங்காய்க் கட்டுப்பட்டுப் பயின்ற இலக்கியப் பயிற்சி உடையவர்க்கே இத்திறன் அமையும், வரலாறு உதவுமா? இலக்கியத்தை ஆய்ந்து மதிப்பிடுவதற்கு இலக்கிய ஆசிரியரின் வரலாறு ஓரளவுதான் துணை செய்ய முடியும். ஆசிரியரின் வாழ்வு இத்தகையது. அவர் வாழ்ந்த காலம் இன்னது என்று சில குறிப்புகள் அறிதல் போதும், விரிவாக அவருடைய வரலாற்றை அறிதல் வரலாற்றுத்துறை. இலக்கியத் தில் நாம் காண விரும்புவது அவருடைய உள்ளத்தையே; வாழ்வை அன்று. நாடகப் பெரும்புலவர் சேக்ஸ்பியரின் உள்ளத்தை அவருடைய நாடகங்கள் புலப்படுத்துகின்றன; அவை போதும் அவருடைய வரலாறு ஒன்றும் தெரியாமை யாமல் கற்பவர் இழப்பது ஒன்றும் இல்லை, சேக்ஸ்பியர் உலகத்திற்கு என்ன தெரிவிக்க முடிந்ததோ, என்ன தெரிவிக்க விரும்பினாரோ, அவரைப் பற்றித் தாம் அறியவிரும்பவில்லை என்று முர்ரை என்னும் அறிஞர் கூறியுள்ளார்1.அத்தகைய மனப்பான்மை இலக்கியங்களைக் கற்பவர்க்கு வேண்டும். ஒரு புலவரின் நூலைப் படித்து உணர்வதற்கு அவருடைய வாழ்க்கை வரலாறு ஒரளவு உதவ முடியும். அந்த அளவிற்கு அவருடைய வாழ்க்கை வரலாற்றை பயன்படுத்திப் பிறகு விட வேண்டும். அவ்வாறு அல்லாமல், அவருடைய வாழ்க்கையில் உள்ள சில பகுதிகளின் மேல் கொண்ட வெறுப்பாலோ, அவருடைய கொள்கைகள் அவர் சார்ந்த சமயம் கட்சி முதலியவற்றால்ஆகிய வெறுப்பாலோ, அவர் இயற்றிய நூலை வெறுத்து வேண்டுமென்றெ தூற்றிக் குறை காணலாகாது புலவரின் வாழ்க்கை வெறுக்கத் தக்கதாக இருந்திருக்கலாம்; புலவர் ஒழுக்கம் கெட்டவராக இருந்திருக்கலாம்; ஆயின், நூலை அது பற்றிப் பழித்தல் நேர்மையான ஆராய்ச்சி முறை அன்று. எவர்க்கும்மின்னொளி போல் சிற்சில வேலைகளில் 1. We know nothing about him-for practical purposes, noting. For my own part, I neither expect nor desire to know more. what he could and tell the world. he told: there are his works; there is the man -J.M. Murry. Discoveries, p. 228. |