| உயர்ந்த எண்ணங்களும் விழுமிய உணர்ச்சிகளும் ஏற்படல் உண்டு. அவற்றை மட்டும் அப்புலவர் வடித்துக் கொடுப்பாராயின், அவருடைய நூல் உயர்ந்த எண்ணங்களும் விழுமிய உணர்ச்சிகளும் நிறைந்து விளங்கும். ஆதலின், அத்தகைய நூலை அவருடைய வாழ்க்கைக் குறையைக் கொண்டு அளந்து கூறல் ஆகாது. தரம் காணல் இலக்கிய ஆசிரியர்களில் இன்னார் இன்னாரை விட உயர்ந்தவர், இன்னார் இன்னாரை விடத் தாழ்ந்தவர் என்று அவர்களின் தரத்தை நிறுவுவதே இலக்கிய ஆராய்ச்சி என்று சிலர் கருதுகின்றனர். அவ்வாறு ஒப்பிட்டு உயர்வுதாழ்வு காண்பதற்குத் தக்க கருவிகள் இல்லை, ஒருவர் காவியம் இயற்றியிருக்கலாம். இன்னொருவர் நாடகம் இயற்றியிருக்கலாம். அந்தக் காவியத்தையும் இந்த நாடகத்தையும் ஒப்பிட்டு அது கொண்டு ஆசிரியர்களின் தரத்தைக் காண்பது எவ்வாறு? இருவரும் காவியமே இயற்றினார் எனினும், அந்தக் காவியத் திற்கும் பொருளான வாழ்க்கை வேறாக இருக்கலாம்; இந்தக் காவியத்திற்குப் பொருளான வாழ்க்கை வேறாக இருக்கலாம். ஒன்று போராட்டம் பெருகிச் சுவை மிகுந்த வாழ்க்கையாகவும் மற்றொன்று அமைதியானதாயச் சுவை குறைந்த வாழ்க்கை யாகவும் இருக்கலாம். அவ்வாறு வேறுபட்ட கதைப் போக்கு உடைய காவியங்களைக் கொண்டு ஆசிரியர்களின் தரத்தை ஆய்வது தவறு அன்றோ? ஆகவே இம்முயற்சி வெற்றி தருவது அன்று; விரும்பத்தக்கது அன்று. புறக் காரணம் மக்களுக்குக் கவர்ச்சியாக இருப்பது எதுவோ அதையே சிறந்த இலக்கியம் என்று கூறல் இயலாது. இலக்கியத்தை ஆயும்போது அதன் விழுமிய உணர்ச்சி, சீரிய கற்பனை, அழகிய வடிவம் ஆகியவை பற்றி ஆய்தல் வேண்டுமே அன்றி. மக்களின் உள்ளத்தைக் கவரும் நூல் என்னும் கரணம் பற்றிப் போற்றுதல் கூடாது. ஏன் எனில், மேற் கூறிய மூன்ற காரணமும் அல்லாமல் வேறு ஏதேனும் ஒரு காரணம் பற்றி மக்கள் எல்லோரும் ஒரு நூலைப் போற்றுதல் கூடும். அந்த நான்காம் காரணம், அரசியல் செல்வாக்கு, சமயச் சிறப்பு, ஆசிரியரின் பெருவாழ்வு |