பக்கம் எண் :

272இலக்கியத் திறன்

Untitled Document

முதலானவற்றுள் ஒன்றாக இருக்கலாம்; அல்லது, மக்கள் பலரும்
விரும்பும் காமச் சுவை முதலியன அவர்கள் விரும்பும் வகையில்
அமைந்ததும் காரணமாக இருக்கலாம். அந்த நான்காம் காரணம்,
இலக்கியத்தின் சிறப்புக்குக் காரணம், இலக்கியத்தின் சிறப்புக்குப்
புறம்பானதே   அன்றி,  உட்பட்டதன்று.  அதற்கு உரிய காலம்
மாறியவுடன், அந்தக்காரணத்தால் ஏற்பட்ட கவர்ச்சி குன்றிவிடும
அந்நிலையில் நூலும் சிறப்பிழக்கும். அவ்வாறே, வேறு ஏதேனும்
ஒரு புறக்காரணம்     பற்றி   ஒரு  நூல் போற்றுதல் குறைந்து
நிற்குமாயினும்,காலம் மாறிய  பின்.அந்தப் புறக்காரணம் மறையும்
நிலை   வந்தபின்,  அந்நூல்   மீண்டும்   ஒளிவீசத்   திகழும்.
சிலப்பதிகாரம்  சமணரால்  இயற்றப்பட்டது என்ற காரணத்தால்
சைவ வைணவ இயக்கங்கள் ஓங்கியிருந்த காலத்தில்போற்றுவார்
குறைந்திருந்தது.    இன்று,   எச்சமய  நூலையும்  இலக்கியப்
பெற்றிக்காகக் கற்கும் மனப்பான்மை வளர்ந்தபின்,சிலப்பதிகாரம்
காவியச்   சிறப்புடையதாகப்   போற்றப்பட்டு  வருகிறது. அரச
குடும்பத்தில்     பெற்றிருந்த    செல்வாக்காலும்   சிறப்பாலும்,
ஒட்டக்கூத்தர்    அக்காலத்தில்   கவிச்சக்கரவர்த்தியாகப் புகழ்
பெற்றிருந்தார்1.அவருடைய பிள்ளைத்தமிழ், உலாக்களும், சோழ
வேந்தர்களைப்   பாட்டுடைத்   தலைவர்களாகக்   கொண்டன
ஆதலால், அக் காலத்தில்மிக்க பெருமையுற்று விளங்கின. இன்று
ஒட்டக்கூத்தர்     பழங்காலப்     புலவர்களுள்   ஒருவராகக்
கருதப்படுகிறாரே   அல்லாமல்,   அன்று   இருந்த சிறப்போடு
போற்றப்படுவதில்லை.   அந்தப் பிள்ளைத்தமிழும் உலாக்களும்
அன்று போல் இன்று ஆர்வத்தோடு  கற்கப்படுவதில்லை. கம்பர்
இயற்றிய இராமாயணத்தின் பாட்டுகளை  அவருக்குப் பின் வந்த
உரையாசிரியர்கள்     பலர்      மேற்கோளாகக்   காட்டவும்
முன்வரவில்லை.   இன்று  இலக்கிய  ஆராய்ச்சியாளர் எவரும்
அப்பாட்டுகளைப்     புறக்கணிப்பதில்லை.      வேத நாயகம்
பிள்ளையின் பிரதாப முதலியாரின் சரித்திரம் அன்று இலக்கியச்


      1. The effort to grade authors in ascending scale
of merit,   or   to  apply any comparative standard of
excellence, is never    very successful and never very
wise...There is not enough fundamental similarity in their
work to afforde proper basis of comparison.
      -C.S. Winchester, Some Principles of Literary
Criticism, p.2