பக்கம் எண் :

274இலக்கியத் திறன்

Untitled Document

ஆயின், இலக்கியமோ,   இறுதி வரையில் ஆராய்ச்சிக்கு இடம்
தருவது;   குணங்களுக்கு  இடையே குற்றமும் இருத்தல் கூடும்
என்று எண்ணி நெருங்கச் செய்வது;நம்பிக்கை என்பதற்கு இங்கு
இடம் இல்லை.இந்நிலையில்,சமயத் தொடர்பு உள்ள  இலக்கியங்
களைப் பற்றிய நடுநிலையான ஆராய்ச்சி பெருக  வழி இல்லை;
பிற   தொடர்பு  உள்ள  இலக்கியங்களைப் பற்றிய ஆராய்ச்சி
மட்டுமே தடையின்றி வளர்கிறது.

     அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
     இன்மை அரிதே வெளிறு.1


இவ்வாறு    திருவள்ளுவர் யாவரிடத்தும் அறியாமை இருத்தல்
கூடும் எனக்  கூறுவதைச் சமயத் தொடர்பு இல்லாத இலக்கியத்
தின் ஆராய்ச்சிக்கு மட்டுமே கொள்ள முடிகின்றது.

     மற்றொன்றும்  இங்குக் கருதத் தக்கது ஆராய்ச்சி எனின்,
ஒத்த   பொருளோடு  ஒப்பிட்டுச்   சீர்தூக்குதல் உண்டு. ஒரே
வகையான இலக்கியங்கள்  சில இருப்பின் அவற்றை ஒப்பிட்டுக்
காணத்  தோன்றும். சமயத் தொடர்பு இல்லாத இலக்கியங்களை
அவ்வாறு   ஒப்பிட்டு உண்மை காணல் எளிது. ஆயின், சமயத்
தொடர்பு   உள்ள   இலக்கியங்களை  ஒப்பிடுவதே குற்றமாகக்
கருதுமளவிற்குச் சமய உணர்ச்சி தடை ஏற்படுத்துவதால் அதற்கு
வழி இல்லை.    மொழியியல் (Linguistics) ஒரு சிறந்த கல்வித்
துறையாக    வளர்ச்சி பெற்றதற்குக் காரணம், பல மொழிகளை
ஒப்பிட்டு     உண்மை காணும் வாய்ப்பு இருந்தமையே ஆகும்.
அரசியல்    முதலிய வேறு துறைகளிலும் அவ்வாறு ஒப்பிட்டுக்
காணல்    பேருதவி புரிந்துள்ளது. ஆயின் சமய இலக்கியங்கள்
அதற்கு    இடம்  தராமையால், அவற்றைப் பொறுத்தவரையில்
ஆராய்ச்சி இடர்ப்படுகிறது.

      தமிழ் இலக்கியங்களுள், இடைக்காலத்து இலக்கியங்களில்
பெரும்பான்மையானவை சமயத்தொடர்பு உள்ளவை; சமயத்தைப்
பரப்புவதற்காகவே இயற்றப்பட்டவை ஆதலின் அந் நூல்களைப்
பற்றிய ஆராய்ச்சி   தட்டுப்படுவதைக்  காண்கிறோம். ஆயினும், சமயத்தொடர்புஇல்லாத நேர் இலக்கியங்களில் (pure Literature)
ஆராய்ச்சி தொடங்கி அதில போதிய பயிற்சி பெற்ற பின்னர்,நடு


1. திருக்குறள், 503