| நிலையான உள்ளத்துடன், சமயத் தொடர்பான இலக்கியங் களையும் ஆராயப் புகலாம். இன்று இலக்கிய ஆராய்ச்சி நல்ல முறையில் வளர வளர, உயர்ந்த நூல்கள் இவை, உயர்வற்ற நூல்கள் இவை என்று பகுத்தறிதல் எளிதாகும். அதனால் உயர் ந்த நூல்கள் மட்டும் மக்களிடையே வாழ வழி பிறக்கும் என்று நம்பலாம். ஆனால், இன்று உள்ள நிலையில், ஒரு நூல் அழியாமல் வாழ்வதற்கு அதன் இலக்கியச் சிறப்பு அல்லாத வேறு சில சூழ்நிலைகள் - அரசியல் செல்வாக்கு, விளம்பர ஆற்றல், சமயச் சார்பு முதலியவை காரணமாக இருப்பதை ஆங்காங்குக்காண்கிறோம். அதுபோலவே, இலக்கியச் சிறப்பு உள்ள நூல்கள் சில அச்சிடுவாரும் இன்றி, கேட்பாரும் இன்றி மறைந்தழிவதையும் காண்கிறோம். அழியாமல் நிலைபெறும் தன்மை, தக்க நூல்களுக்கு இருத்தல் போலவே தகுதியற்ற நூல்கள் சிலவற்றிற்கும் இருக்கக் காண்கிறோம்.1 எதிர்காலம் அச்சு முதலிய கருவிகளும் கட்டாயக் கல்விமுறையும் வளர்ந்ததால் படிக்கும் மக்களின் தொகை பெருகப் பெருக, வேறொரு தீமையும் வந்து சேர்கிறது. (அதனால், படிப்பவரின் தொகை குறைவாகவே இருத்தல் வேண்டும் என்பது நோக்கம் அன்று. உண்மை நாடி மதிப்பிடும் போக்கு வளர வேண்டும் என்பதே நோக்கமாகும்,) நூல்களைக் கற்றுத் தேர்ந்தறியும் அறிஞர்கள் விரும்பும் நூல்களையே பெரும்பான்மையரான பொதுமக்கள் விரும்பிப் படிக்கிறார்கள் என்று சொல்வதற்கு இடம் இல்லை. நூல்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலோர் விருப்பத்திற்கும் அறிஞர் விருப்பத்திற்கும் இடையே பெரிய 1. Circumstances which have nothing to do with value sometimes determine survival, and work which is of great value must often perish for that very reason it. never gets printed, none well look at it or listen to it And immortality often attaches itself of the bad as firmly as to the good. -I.A. Richards, Principles of Literary Criticism, p.220 |