பக்கம் எண் :

276இலக்கியத் திறன்

Untitled DocumentUntitled Document

வேறுபாடு   வளர்ந்துள்ளது1. அது   எதிர்காலத்தில் உயர்ந்த
நூல்களின் வளர்ச்சிக்கே இடையூறாக முடியுமோ என்று அறிஞர
சிலர்   அஞ்சுகின்றனர்.  உயர்ந்த நூல்கள் என்று சொல்லப்படு
வனவற்றின் தன்மைகள்  எள்ளி நகையாடப்படலாம். அவற்றிற்கு
எதிர்ப்பும்    வளரலாம்.   வெறுப்பு  முதலியவற்றை வளர்த்தல்
இக்காலத்தில் எளிதாகவும் உள்ளது. ஆகவே, நூலை, மதிப்பிடும்
அளவைகள் இதுவரையில்  காக்கப்பட்டவற்றை விட, இனி மிக்க
அக்கரையோடு காக்கப்பட   வேண்டும். இவ்வகையில் உண்மை
யான இலக்கிய   ஆராய்ச்சி   வளர்தல்   இன்றியமையாததாக
உள்ளது.

தொண்டு

     இலக்கியம்    இயற்றி  உதவும் புலவர்கள் உலகத்திற்குத்
தொண்டு செய்வது   போலவே,   இலக்கிய ஆராய்ச்சியாளரும்
உலகத்திற்குத் தொண்டு    செய்கிறார்கள்   எனலாம். இலக்கிய
ஆராய்ச்சி    இருவகையில்   பயன்    விளைக்கிறது,   ஒன்று
இலக்கியத்தை    அது   நன்கு  விளக்குகிறது;    மற்றொன்று,
இலக்கியத்தில் சிறந்தது சிறப்பற்றது என்று தேர்ந்து அறிவிக்கிறது.
ஆகவே, கற்கும் இலக்கியத்தை நன்றாகக்  கற்கவும்,  தக்கதைக்
கொண்டு    தகாததைக்   கைவிடவும்   அது   உதவியாகிறது.
பலவகையான நூல்கள் கணக்கின்றிப் பெருகிவரும் இக்காலத்தில்,
எல்லாவற்றையும்   கற்றல்   இயலாது;  தக்கவற்றை  மட்டுமே
தேர்ந்தெடுத்துக்   கற்றல் வேண்டும்; தகுதியற்றவற்றைக் கற்றுக்
காலத்தை     வீணாக்காமல்   காத்துக்கொள்ளல்   வேண்டும்.
ஆகையால்  முன்  காலத்தை விட இக்காலத்திலும் எதிர்காலத்
திலும் இலக்கியஆராய்ச்சி பெரிதும் பயனுள்ள தொண்டு ஆகும்.

முறை

 ஆராய்ச்சி செய்யும் அறிஞர் ஓர் இலக்கியத்தை நன்கு கற்றல் வேண்டும்; அதன் ஆசிரியரின்   உள்ளத்து உணர்ச்சி இன்னது
என உணர்ந்து பிறர்க்கு உணர்த்தல்வேண்டும்.ஆசிரியர் படைத்த


     1. With the   increase   of population the problem
presented by the  gulf between   what is preferred by
the majority   and what  is accepted   as excellent by
the most   qualified opinion has become infinitely more
serious     and appears likely to become threatening in
the near future. For many reasons, standards are much
more in need of defence than they used to be. -Ibid,p,36.