| விளக்கம் என்று ஒருவர் ஒரு நூல் எழுதின், அந்த விளக்கை அணைக்கவல்ல சூறாவளியாக 'இலக்கண விளக்கச் சூறாவளி' என்று மற்றொருவர் நூல் எழுதினமை காணலாம். அத்தகைய நூல்கள் பல அக்காலத்து இருந்தன போலும், அவ்வாறு ஆராயும் ஆராய்ச்சியாளர், மிகச் சிறந்த புலவரின் நூல்களிலும் குறை காணின் இன்ன இன்ன மட்டுமே குறை என்று கூறி அந் நூலைப் பாராட்டுதல் வேண்டும். சிறப்பற்ற புலவரின் நூலாயினும் பல குறைகளுக்கு இடையே விளங்கும் நல்ல பகுதிகள் இவை இவை என்று காட்டல் வேண்டும். அவ்வாறு கூறுதலே இலக்கியத் துறைக்குத் தேவையான ஆராய்ச்சியாகும். மதிப்புரைகள் செய்தித்தாள்களும் வார இதழ்களும் திங்கள் இதழ்களும் இலக்கிய நூல்களைப் பற்றி மதிப்புரை எழுதும் வழக்கம் பெருகியுள்ள இக்காலத்தில் நடுநிலையான ஆராய்ச்சியாளர் செய்யத்தக்கதொண்டு இன்றியமையாததாக உள்ளது.ஏன் எனில் செய்தித்தாள் முதலியவை நடுநிலையாக நின்று நூல்களை மதிப்பிடுவதற்கு வாய்ப்புக்குறைவு. குறித்த காலத்தில் விரைவில் வெளியிட வேண்டிய கடப்பாடு இருத்தலால் இலக்கிய ஆராய்ச் சிக்கு உரிய பொறுமைக்கும் பயிற்சிக்கும் இடம் இல்லாமற் போகிறது. தவிர, செய்தித்தாள் முதலியன பெரும்பாலும் கட்சிப் பற்றும் குழுப் பற்றும் அடிப்படையாகக் கொண்டு வாழ்பவை. ஆகவே, நடுநிலையான போக்கை எதிர்பார்த்தல் இயலாது. தம் கட்சியும் குழுவும் விளங்கினால்தான் தாம் வாழ முடியும் என்ற நிலைஅவற்றிற்கு இருத்தலால்,தம் கட்சியிடத்தும் குழுவிடத்தும் விருப்பு மிகக்கொண்டு, பிறவற்றினிடத்து வெறுப்பைக்காட்டுதல் இயற்கையாகும். இந் நிலையில் அவை ஒரு நூலை வானளாவப் புகழ்தலும்மற்றொன்றை மிகத் தூற்றிக் குறை கூறலும் இயல்பே ஆகும்.பத்து ஆண்டுகளுக்கு ஒரு நூலை வானளாவப் புகழ்ந்து, "இதுவரையில் இத்துறையில் இத்தகைய நூல் தோன்றியதும் இல்லை. இனித் தோன்றப் போவதும் இல்லை" என ஒரு வார இதழ் புகழ்ந்து எழுதியிருக்கும்.அதன் காரணமாக அந்த நூலும் ஓரளவு பரவியிருக்கும், ஆனால் உண்மையான தகுதி இல்லாத காரணத்தால் அந்த நூல் இந்தப் பத்து ஆண்டுகளில் போற்று வாரற்று மங்கியிருக்கும். இப்போது அதே துறையில் மற்றொரு நூல் தோன்ற, மீண்டும் அதே இதழ் அதே சொற்களால் இந்த
|