பக்கம் எண் :

ஆராய்ச்சி 279

Untitled Document

நூலைப் புகழ்ந்து எழுதும். சென்ற தேர்தலில் ஒருவரைப் புகழ்ந்த
வாய், மீண்டும்  அடுத்து வரும் இந்தத் தேர்தலில் அதே உயர்வு
நவிற்சி முறையில்   மற்றொருவரைப் புகழ்தல் போல், அந்த வார
இதழும் எழுதும் மக்களும்  அதைப் படித்து இந்தப் புதிய நூலை
வாங்கி அடுக்குவர்.   ஆகவே, ஒரு வகையில், நூலின் மதிப்பை
அளந்து காட்டுவதற்கு மாறாக, நூலை மக்களிடம் பரப்பும் விளம்
பரக் கருவியாக மதிப்புரை பயன்படுதலைக்காணலாம். பொய்யான
ஒரு கருத்தையும் திரும்பத்  திரும்பச் சொல்லி வருதலால் அதை
மக்கள்   உண்மை     என்று  நம்புமாறு செய்யமுடியும் என்று
அரசியல் தலைவர்   சிலர்   நம்புதல்   போல், மதிப்புரைகளில்
வற்புறுத்திக் கூறுதலால்   ஒரு நூலை வாழ வைத்துப் பரப்பிவிட
முடியும்.   அல்லது மங்க வைத்து அழித்து விட  முடியும் என்ற
மதிப்புரையாளர்   சிலர்   நம்புகின்றனர். இலக்கிய  ஆராய்ச்சி
இவ்வாறு தன்னலத்திற்கும்   வாணிகத்திற்கும் உரிய கருவியாகப்
பயன்படும் காலத்தில்   உண்மையும்   நடுநிலையும்   கொண்டு
வளரும்    ஆராய்ச்சித்திறன்   மிக   மிக   இன்றியமையாதது
ஆராய்ச்சியாளர்    பரந்த   அறிவும்   நடுநிலைப்  பயிற்சியும்
உடையவராக   இருந்தாலன்றி,   அவருடைய    மதிப்புரைகள்
மதிக்கத்   தக்கன   அல்ல  என்ற  அறிஞர் ஹட்சன் கூறுவது உண்மையாகும்.1


நடுநிலைப் பயிற்சி

     நடுநிலைப்     பயிற்சி என்பது எளிதில் அமைவது அன்று
ஆராய்ச்சியாளர்     தம்முடைய   குற்றம்  குறைகளைத் தாமே
ஆராயும்    அளவிற்கு    உண்மை   நாட்டம்   உடையவராக
இருந்தால்தான் அது அமைவதாகும்.

      எதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
     தீது உண்டோ மன்னும் உயிர்க்கு2


     1. The critic needs knowledge to   give him breadth
of view and to provide a proper basis for his judgement.
He needs discipline of mind to   make   that knowledge
serviveable, Other things being equal, his competence as
interpreter   and    judge   will be in  proportion to his
knowledge   and  discipline and if these are lacking, his
opinions, however   interesting and suggestive will carry
little weight -W.H. Hudson,  An Introduction to the Study
of Literature, p.285.

      2. திருக்குறள், 190