பக்கம் எண் :

கலைகள் 29

Untitled Document

அனுபவத்திற்கு    ஏற்ப   அச்சுவையைப் பலவகையாகப் பாகுபாடு
செய்தனர்.   தொல்காப்பியனார்    அவை   புலப்படும்  வகையை
விளக்குமிடத்து எட்டுவகை மெய்ப்பாடுகள் எனக் கூறியுள்ளார்.

       நகையே அழுகை இளிவரல் மருட்கை
      அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
      அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப*

     இந்த எட்டும் வாழ்க்கையில் வெவ்வேறாக       இருப்பினும்,
கலைத்துறையில் இவை யாவும் அளிக்கும் பயன் ஒன்றே ; அதுவே
கலையின்பம் எனப்படுவது,அக்கலையின் பத்திற்கு உரிய கவர்ச்சித்
தன்மையே அழகு  ( beauty aesthetics )  என்ற    சொல்லால்
ஐரோப்பிய அறிஞர் வழங்கி வருகின்றனர்.

அழகு விருந்து

     கலைகள் எல்லாம்   அழகும்   இன்பமும் அளிப்பன எனக்
கண்டோம்.அழகைப்பற்றி விளக்கும்     அறிஞர். ஒவ்வொருவரும்
தம்    விருப்பம்போல்  எடுத்துரைக்கின்றனர் ;    தம்   விருப்பு
வெறுப்புகளை அகற்றி நடுநிலையில் நின்று அழகு இன்னது என்று
தெளிவாகக்   கூறல்    வேண்டும்.  அத்தகைய  முயற்சி  இன்று
வளரவில்லை.   அதனால்   அழகு   பற்றியும்  அழகை உணரும்
மனநிலை பற்றியும் அதன் மதிப்பீடு பற்றியும் தவறான கருத்துக்கள்
பல    இடம்  பெற்றுள்ளன. எதிர்காலத்தில்       நடுநிலையான
ஆராய்ச்சியின்   பயனாக   உண்மைகள்     தெளிவாகும்போது,
அக்காலத்தினரின் கொள்கைகள் மதிப்பிழந்து   போகும் என்கிறார்
அறிஞர் ரிச்சர்ட்ஸ்.@

     கலையைப் பற்றியும் கலை நல்கும்  அழகுவிருந்து பற்றியும்
பிராட்லே என்னும் ஆராய்ச்சியாளர்கள்   விளக்குமிடத்து, அது
இந்த நனவுலகத்தின் ஒரு பகுதி அன்று  என்றும், இதன் படியும்
அன்று  என்றும்,அது முழுமையும்  உரிமையும் உள்ள ஒரு தனி


     * தொல்காப்பியம் பொருள், மெய்ப்பாட்டியல். 3.

     @ It would be borne in mind that the knowledge which
the men of A.D. 3000 will   possess. if all goes well, may
make all our aesthetics, all our psychology, all our modern
theory of Value, look pitiful
    - I. A. Richards, Principles of Literary Criticism, p.3.