பக்கம் எண் :

30இலக்கியத் திறன்

Untitled Document

உலகம்   என்றும்   கூறுகின்றார்.1   ஆயினும், அறிஞர்  ரிச்சர்ட்ஸ்
அத்தகைய    கருத்துகளை    வெறுத்துரைக்கின்றார்.     அவ்வாறு
உணர்ச்சி   வயப்பட்டுப் புனைந்து கூறுவதால் உண்மை  காண்பதற்கு
இடர்ப்பாடுகள்    பெருகும்   என்பது     அவருடைய    கருத்து.2
அழகாகக் கலையைப்   படைத்து மகிழ்விப்பது வேறு ; அந்த  அழகு
இன்னது   என்று   விளக்குவது  வேறு. அவ்வாறு   விளக்கும்போது,
உணர்ச்சி  வயப்பட்டு  மயங்காமல்,    அறிவியல்  நெறியில்   நின்று
ஆராய்ந்துதெளிவாகக் கூறுதல் கடமையாகும்.

            கண்ணுக்குப் புலனாகும் கவர்ச்சித்  தன்மையை மட்டும்
அழகு   என்று     பிறவிடங்களில்    வழங்குகிறோம்.     ஆனால்
கலைத்துறையில் அழகு     என்பது மிக  விரிவான பொருளில் செவி
முதலிய   புலன்களுக்கு   உரிய  கவர்ச்சித்  தன்மையையும் குறிக்க
வழங்குகிறது. இனிமை   மிகுந்த  ஓசையையும் நயமான அசைவையும்
குறிக்கவும் அழகு என்ற   சொல்லே   வழங்குகிறது.   புலன்களுக்கு
இன்பம் தருவனவற்றை எல்லாம்   அழகு    எனக் குறிக்கின்றனர்.*
அக்கருத்தின்படி ,     ஓவியத்திலும்     சிற்பத்திலும்      மட்டும்
அல்லாமல்,   இசையிலும்,   இலக்கியத்திலும்  அழகு உண்டு என்பர்.
உணர்ச்சிக்கு   ஏற்றவாறு   பொருந்த   அமைந்த      ஒலிநயத்தை
அழகானது என்பர்.   உரிய   இடத்தில் தக்கப் பொருளில் அமைந்த சொல்லையும் அழகான சொல் என்பர்.

அழகு உள்ள இடம்

        அழகு     எங்கும் உள்ளது.   பொருள்களில்   உள்ளதா?
பொருள்களைப்   புலன்கள்  வாயிலாக நுகரும் மனத்தில் உள்ளதா?
இதில்   கருத்து    வேறுபாடு  உண்டு. அழகு பொருள்களில் பண்பு
அன்று   என்றும்,  கலையின் பண்பு அல்லது கலைஞரின் மனத்தின்



      1. Its nature is to be not a part, not yet a copy, of the
real world, but a world in itself independent, complete,
autonomous.
     - A.C. Bradley.
     2. This view of the arts as providing a private heaven
for aesthetics is as will appear later, a great impediment
to the investigation of their value.
    - I.A.Richards, Principles of Literary Criticism, p.17.
    * The world (beauty) as certainly applied to a very
wide variety of things that agree in giving pleasure.
    - C.T. Winchestor,Some Principles of Literary
Criticism, p.71.