பக்கம் எண் :

32இலக்கியத் திறன்

Untitled Document
சுவையுணர்வு

              சுவையுணர்வு எல்லோருக்கும் இயற்கையாய் அமைந்
திருப்பது   போலவே  கலையுணர்வும் எல்லோர்க்கும்  இயற்கையாக
அமைந்திருக்கிறது.   சிலர்   நுட்பமான   சுவை வேறுபாடுகளையும்
உணர வல்லவர்களாக    இருத்தல்   போல் ஒரு சிலர் கலைத்திறன்
மிக்கவர்களாக உள்ளனர். நாவின்     சுவையுணர்வு, உண்டு பயிலும்
பயிற்சியால்   வளர்வது போல்    கலைத்திறனும் கலைப்பயிற்சியால்
வளர்வது உண்டு. நுகரும் தகுதி  எல்லோருக்கும் உண்டு. பயிற்சியும்
திறனும் ஒரு சிலருக்கே   உண்டு.  எல்லோருக்கும்     தகுதி இருந்
ததால்தான்    எல்லோருக்கும் உணர்வின் சுவை உணர முடிகின்றது.
எல்லோருக்கும்   கலையுணர்வு   ஓரளவு    இருப்பதால்தான் இசை
ஓவியம் போன்ற    கலைகளை   எல்லாரும் போற்ற முடிகிறது. ஒரு
சிலர்க்கே  பயிற்சியும்   திறனும்   மிகுதியாய் இருப்பதால் அவர்கள்
மட்டுமே சுவையாகச்    சமைக்க வல்லவர்களாகவும்  இருக்கிறார்கள்,
சுவை    நுட்பம்      உணர்பவர்களாகவும்   இருக்கிறார்கள். இசை
நாடகம்    முதலிய   கலைகளிலும்   ஒரு சிலரே படைக்கும்  கலை
ஞராகவும்    திறனாய்வாளராகவும்   விளங்குகின்றனர்.    உணவை
மேற்போக்காக    நுகர்வோர்   பலராகவும்   ஆய்ந்து  நுகர்வோர்
சிலராகவும்  படைத்து     மகிழ்வோர் ஒரு   சிலராகவும் இருத்தல்
போலவே   கலையிலும்   மேற்போக்காக   நுகர்வோரும்  ஆழ்ந்து
நுகர்வோரும்  படைத்து    நுகர்வோரும் உள்ளனர். அவர்களுக்குள்
கலைத்     திறனில்   வேறுபாடு   இருந்தபோதிலும்,எல்லோருக்கும்
கலையுணர்வு   ஓரளவேனும்   அமைந்திருத்தல்    உண்மையாகும்.
அவை ஒரு    சிறிதும்    அமையப் பெறாதவர்கள் கலையை மேற் 
போக்காகவும்  நுகர்தல் இயலாது.      கலைக்கு உரிய உணர்வு நம்
உள்ளத்தே ஓரளவு அமைந்திருத் தலால்தான் சிறந்த  கலைஞர்களின்
படைப்புக்களையும்    நாம் ஓரளவு நுகர முடிகின்றது.  ஓவியம் நாட
கம் இசை, பாட்டு   முதலிய எல்லாக் கலைகளுக்கும் இந்த உண்மை
பொருந்துவதாகும்*


     *The true secret and virtue of a poem are to   be
seized and appropriated by us only through the exercise
on our parts of powers similar in kind to those    which
gave the poem life, however for they may fall  short of
these in strength and vitality. To those who are    born
without any poetic sense at all, it is, of course, as  futile
to talk aboutthe beauty and meaning of poetry as it is to
talk  about the beauty and meaning of music to those who
are bornwithout a musical ear.But wherever the poeticsense
exists, in however rudimentary a   form-and it is at  least
latent in the majority of normally    constituted men  and
women-it is       capable of cultivation. W.H. Hudson, An
introduction to the study of Literature, p.126.