குழந்தையின் அழகைச் சிற்பக் கலை என்றும் உள்ளதாக்கிக் காட்டுகிறது மாறிப் போகும் உள்ளத்து உணர்ச்சியை அவ்வாறே பிடித்து வைத்து, வேண்டும் போதெல்லாம் எளிதில் கொணர்ந்து தருவன இசைக்கலையும் இலக்கியக் கலையுமாகும். இவ்வாறு நில்லாதவற்றை நிலையின என்று ஆக்கும் நல்ல ஆற்றல் கலைக்கு அமைந்திருக்கிறது.* எதிர்வும் இறப்பும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு வேளையில் ஏங்கி உணர்ந்த உணர்ச்சிக்குக் கற்பனை நிலையான வடிவம் தருவது உண்டு. 'ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே' என்ற பாரதியாரின் பாட்டு நாட்டுரிமை பெறாத காலத்தில் அதனைப் பெற்றுவிட்டதாகக் கற்பனை செய்து பாடியதாகும். உரிமை பெற்றால் எவ்வாறு மகிழ்ந்து கூத்தாடுவோம் என்பதை உரிமை பெறாத காலத்திலேயே பாரதியார் நன்கு உணர்ந்து பாடினார். உரிமை பெற்ற முதல் ஆண்டுக்கு உரிய பாட்டே ஆயினும் 1948இல் பாடிக் கொண்டாட வேண்டிய பாட்டை நாம் இன்னும் பாடி மகிழ்கிறோம். இதற்குக் காரணம் என்ன? அந்தக் காலத்து மக்களின் உள்ளத்தில் இருந்த சுதந்திர வேட்கையை நாம் இன்று கற்பனை செய்து உணரமுடிவது தான் காரணம். ஆக, கற்பனை முன்னோக்கிச் செல்வதும் உண்டு; பின்னோக்கி வாழ்வதும் உண்டு. அந்தப் பாட்டுப் பாடிய நிலையில் பாரதியாரின் கற்பனை முன்னோக்கிச் சென்றது. அதை இன்று பாடும்போது நம்முடைய கற்பனை பின்னோக்கிச் சென்று அந்த உணர்ச்சியைப் பெற முயல்கிறது. புலவர்களின் கற்பனை, பின்னோக்கிச் சென்று மறந்துபோகக்கூடிய கலையுணர்ச்சியை எல்லாம் மறவாமல் காக்க முயல்வதும் உண்டு. பாரதியாரின் பாஞ்சாலி சபதம் சிறுபான்மை எதிர்காலக் கருத்துகளைத் தழுவியதே ஆயினும் பெரும்பாலும் _______________________________________________________________________ *It is to this same inability to retain our deepest and most illuminating experiences that we must look for an explanation of the artist's creation. Why, it might be asked should the artist create at all? He does so, I surmise, that he may have a souvenir to remind him of an experience he can no longer retain. Creation is a testimony not to present inspiration, but to inspiration which, once enjoyed, has now failed. - C.E.M. Joad Counter Attack from the East,p.88. |