பக்கம் எண் :

கலைகள் 37

Untitled Document

பின்னோக்கி இழுத்துச் சென்று பழைய  நிகழ்ச்சியை நாடகம் போல்
காட்டுவதாகும்.

           இவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றி மறைந்து
போகும்   தன்மை   உடைய   உணர்ச்சிகளை நிலை பெறச் செய்து
வேண்டும் போதெல்லாம்  பெற்று   நுகருமாறு   செய்தல் கலையின்
சிறப்பியல்பாகும்.

உணர்ச்சி மழுங்காமை

              வாழ்க்கைச் சுமையாலும் பழக்கத்தின் காரணத்தாலும்
அழகின்பம்    நுகரும்   ஆற்றல் மழுங்கிவிடுதல் கண்டோம். பழகப்
பழகப்   பாலும்    புளிக்கும்1.     'ஆர்ந்தோர்     வாயில் தேனும்
புளிக்கும்.' படைப்பில்    உள்ள     அழகிய  பொருள்கள் எல்லாம்
பழக்கத்தின் காரணமாகக்     கவர்ச்சி இழந்துபோகின்றன2 அதனால்
எத்தனையோ      அழகுகளைப்   பெற்றிருந்தும்   நுகர  முடியாத
வர்களாக இருக்கிறோம்.   அறிவியல்   கருவிகள்   பெருகிய  பிறகு,
வாழ்க்கையில்    வேகம்     மிகுந்த காரணத்தால்,      பரபரப்பும்
ஆரவாரமும்    பெருகிவிடவே,   அழகுணர்ச்சியைப் பற்றிக் கவலை
இல்லாமற்     போய்விட்டது.     புலன்களின்    அழகுணர்ச்சி மிக
மழுங்கிவிட்டது.     இந்தக் குறையெல்லாம் தீர்த்து அழகுணர்ச்சியை
வளர்த்துப்   பண்படுத்திக் காக்க வல்லனவாக இருப்பவை கலைகளே
ஆகும்.


                1. குறுந்தொகை, 354.

                2. If familiarity does not breed contempt, it
may breed    indifference  or induce a state of passivity
which borders on indifference.
               -C.E.He Haas,   Nature and the country in
English Poetry, p.20.