பக்கம் எண் :

40இலக்கியத் திறன்

Untitled Document

               பாரதியார் கலைகளைப் பற்றி எழுதுமிடத்தில 
உணர்ச்சிகளைப் பற்றிக்      கூறியுள்ளார். "ரச உணர்ச்சியிலே
உள்ளத்தை முழுவதும்  ஈடுபடுத்தக்கூடிய சிலர் கவிதை பாட்டு
சித்திரம் முதலிய தெய்வக் கலைகளிலே சிறப்படைகிறார்கள். ரச
உணர்ச்சி    இல்லாவிடில் இக்கலைகள் நசித்துப்போகும்" என்று
அவர் கூறியுள்ளமை காண்க.*

        அத்தகைய உணர்ச்சிகளிலும், இரக்கம் மிகுந்தவர்களின்
உள்ளமே கலை பிறப்பதற்கு ஏற்ற உள்ளம் என்கிறார் பாரதியார்
"பிறர் இன்பத்தைக் காணும்போது தனது துன்பம் போல் எண்ணி
வருந்தும் இயல்புடைய   ஒருவனும் பிறர் துன்பத்தைக் கருதாத
ஒருவனும்  யாப்பிலக்கணம்  படித்துக்   கவிதை      செய்யப்
பழகுவாராயின், ந்தியவன்    உண்மையான கவிதை எழுதுவான்;
பிந்தியவன் பதங்களைப்  பின்னுவான்; இவனுடைய தொழிலிலே
கவிதை இராது    இப்படியேதான்   ஒவ்வொன்றிலும்." இரக்கம்
மிகுந்தவர்களின்    உள்ளமே    எல்லா      உணர்ச்சிகளும்
கலைப்படைப்புக்கு ஏற்றவாறு அமைந்து விளங்கும் உள்ளமாகும்
என்பது அவர் கருத்து.

            ஓர் அழகான காட்சியைப் பலரும் காண்கிறார்கள்.
காண்பவர்கள் எல்லோரும்அந்த அழகுணர்ச்சிக்கு வடிவம் தந்து
காப்பது இல்லை. பெரும்பாலோர் உடனே மறந்து விடுகிறார்கள்.
கலையுள்ளம் படைத்த ஒருவர் இருவர் மட்டுமே அந்த அழகால்
பெற்ற   உணர்ச்சியை உள்ளத்தில் பதியவைத்துக் காக்கிறார்கள்.
அதற்குக்    கலைவடிவம்   தந்து அழியாமல் நிலைபெறச் செய்
கிறார்கள். காணும் பலருள்ளும் அந்தக்கலைஞர்க்கு மட்டும் அத்
தகைய ஆற்றல் இருப்பதற்குக் காரணம் என்ன?கலைத் துறையில்
பயின்ற   பயிற்சி  காரணம்  எனலாம். அதற்கு அடிப்படையான
மற்றொரு காரணம் உண்டு. அதுஎன்ன?கலைஞர் மற்ற மனிதரைப்
போலவே  கண்   செவி   முதலிய   பொறிகளைப் பெற்றிருந்த
போதிலும் புலன் நுட்பத்தில் மற்ற   மனிதர்களைவிட வேறுபட்ட
வர்களாய் இருக்கிறார்கள். கலைஞர் மற்றவர்களை விட உணர்ச்சி
மிக்கவர்கள்;ஆர்வம் மிக்கவர்கள் மற்ற மனிதர்களுக்கு இனிப்பாக
இருப்பது கலைஞருக்கும்   இனிக்கிறது. அவர்களுக்குக் கசப்பாக


* பாரதியார், கட்டுரைகள், கலைகள், சங்கீத விஷயம்.