உள்ளது கலைஞருக்கும் கசக்கிறது. இனிப்பு கசப்பாகவோ கசப்பு இனிப்பாகவோ வேறுபடுவது இல்லை. ஆனால் இனிப்பையும் கசப்பையும் இன்பத்தையும் துன்பத்தையும் மற்றவர்கள் உணர்வதைவிடக் கலைஞர் மிகுதியாக உணர்கின்றார்கள். மற்றவர்களின் உணர்ச்சி, பழக்க வழக்கங்களுக்கும் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டும் மட்டுப்பட்டும் நிற்க, கலைஞரின் உணர்ச்சி கட்டு அற்றதாய் மட்டுப் படாததாய் ஓங்குகின்ற தன்மை உடையது. அதனால் தான் மற்றவர்கள் செய்தற்கு அரிய செயலைக் கலைஞர் செய்ய முடிகிறது. அழகு உணர்ச்சியைத் தம் உள்ளத்தே ஆழப் பதித்துக் காக்கவும் பதித்த உணர்ச்சியை அழகுறப் படைத்துக் கலை ஆக்கிக் காட்டவும் கலைஞரால் முடிவதற்குக் காரணம் அதுவே. ஆகவே கலைப்பயிற்சி மட்டும் போதாது. கலைஞராவதற்குக் கலைப்பயிற்சியோடு ஆழ்ந்த நுண்ணிய உணர்ச்சியும் வேண்டுவதாக உள்ளது.* சிறப்பியல்பு கடவுள் படைத்த படைப்பைக் கண்டு மனிதன் மகிழ்ந்து எய்தும் இன்பத்தைப் புலப்படுத்துதலே சிறந்த கலையாகின்றது என்றார் அறிஞர் ரஸ்கின்#. கடவுளின் படைப்பு எல்லோர்க்கும் பொதுவாக ஒரே வகையாகத்தான் உள்ளது. அந்தப் படைப்பைக் கண்டுமகிழும் மக்கள் பல வகையாக உள்ளனர். அவர்கள் மகிழும் மகிழ்ச்சி எல்லாம் கலை ஆவது இல்லை. ஆழ்ந்து அகன்ற நுண்ணுணர்ச்சியும் தேர்ந்து அமைந்த கலைப்பயிற்சியும் உடைய ஒரு சிலரின் உணர்ச்சி மட்டுமே கலைவடிவாக அமைகிறது. மற்றவை எல்லாம் ஊமையன் கண்ட கனவாகமாய்கின்றன. கலைஞர் எந்நாளிலும் எந்நேரமும் உயர்ந்த உணர்ச்சியுடன் வாழ்வர் என்று கொள்ளல் பொருந்தாது அவர்கள் பெரும்பான் * He is a above allthings,a man among his fellow-men, with a heart that beats in sympathy with theirs, a heart not different from theirs, only larger, more open, more sensitive, more intense. It is the peculiar depth, intensity and fineness of his emotional nature, which Kindles his intellect and inspires it with energy. He does not feel differently from other men, but he feels more-J.C. Shairp, Aspects of poetry, p.2 # At great art is the expression of man's delight in the work of God. - John Ruskin. |