மையான நேரம் மற்ற மக்களைப் போலவே வாழ்கிறார்கள். மற்றவர்களின் குற்றங் குறைகள் கலைஞரிடமும் உண்டு; குற்றங் குறைகள் மிகுதியாக இருத்தலும் உண்டு. மற்றவர்களைப் போல் அவர்களும் மண்ணின்மீது வாழ்பவர்களே. ஆயின் சில நேரங்களில் அவர்களின் மனம் மிக மிக உயரப் பறக்கும். அவர்களின் வாழ்க்கையில் பற்பல குறைகள் இருந்த போதிலும், மனம் உயரப் பறக்கும் அந்நேரங்களில், மிக விழுமிய உணர்ச்சிகள் அவர்களின் மனத்தில் எழும். மின்னொளி போல் மிக உயர்ந்த உண்மைகள் அவர்களுக்குப் புலனாகும். அவற்றில் அவர்களின் உள்ளம் மிகமிக மகிழ்ந்து திளைக்கும். அந்தச் சிறிது நேர உணர்ச்சிகள் அடுத்த நாழிகையில் மெல்ல மெல்ல அவர்களை விட்டு அகலத் தொடங்கும். ஆயின், அவர்களுக்கு அமைந்துள்ள படைக்கும் திறனைக் கொண்டு, அந்த விழுமிய உணர்ச்சிகளுக்குக் கல்லாலோ சொல்லாலோ ஒலியாலோ பிறவற்றாலோ நிலையான கலை வடிவம் தந்து அழியாமல் காப்பாற்றிவிடுவர்.*இந்தத் திறனாலேயே கலைஞர் மற்றவர்களைவிட மேம்பட்டவராகின்றனர். பயன் நல்கல் அத்தகைய கலைஞர் மிக உயர்ந்த பண்பாடு உள்ள சான்றோர் அல்லராயினும், அவர் அளிக்கும் கலையின் ஒளியால் மற்றவர்களின் மனம் பண்பட்டு உயரமுடியும் கலைஞர் உயர்ந்தவர் அல்லர் என்பதனால், அவர் படைத்து அளிக்கும் கலை உயர்நிலையிலிருந்து வீழ்ச்சியுறாது. கலைஞர் வாழும்நேரம் எல்லாம் உயர்ந்த மனம்பெற்று வாழாவிடினும், கலையொளியான விழுமிய உணர்ச்சியைப் பெற்று மகிழும் அந்த நாழிகையின்போது மிக உயர்ந்த உள்ளம் பெற்று விளங்குவதால், அப்போது அவருடைய உள்ளத்தில் தோற்றம் கொண்ட கலையும் உயர்வு உடையதே ஆகும். அதனால்தான், அவர் படைத்து நல்கும் கலையால் பலர் பண்பட்டு உணர முடிகின்றது.+ * Poetry is the expression of the best and happies moments of the happiest and best minds. - P.B. Shelley A Defence of Poetry. + It is the consumer, not the producer, who benefits by culture, the consumer who becomes humanized and liberally educated. There is no reason why a great poet should be a wise and good man,or even a tolerable human being. but there is every reason why his reader should be improved in his humanity as a result of reading him. - N.Fyre, Anatomy of Criticism, P.344. |