பக்கம் எண் :

கலைஞர் 43

Untitled Document

        கவிஞர் தம் திறமை பற்றி விளக்கிக் கூற அறியார் என்றும்,
அவர்கள்   அறிவிற்   சிறந்து  நிற்றலால் பாட்டுகள் இயற்றவில்லை
என்றும்,   ஒரு தனி    ஆற்றல்    அவர்களிடம் இருப்பதாலேயே
இயற்றுகின்றனர்   என்றும்   சாக்ரடீஸ்    கூறியுள்ளது     இங்குக்
கருதத்தக்கது.    ஆகவே அவர்களிடம் பெறத் தக்க பயன் இன்னது
என்று உணர்ந்து நாடுதலே நம் கடமையாகும்+.

     உலகத்தில்     உள்ள எண்ணற்ற அழகின்பங்களைக்* கண்டும்
கேட்டும்   நுகர   இயலாதவர்களாய்ப்   பெரும்பாலோர் வாழ்க்கை
நடத்துகின்றனர்.  அதனால் உலகின் அழகுச் செல்வம் வீணாகின்றது
எனலாம்.   பலர்   கண்   இருந்தும்   காணாமல்,  செவி இருந்தும்
கேளாமல்,    அழகின்பத்தைப்  பொறுத்த வரையில் குருடர்களாய்ச்
செவிடர்களாய்   வாழ்கின்றனர்   எனலாம்.   இந் நிலையில், அந்த
எண்ணற்ற இன்பத்தை   எல்லாம் அழியாமல் காத்துக் கலை வடிவம்
தந்து போற்றுபவர்    கலைஞர்;     காணாத கண்களையும் கேளாத
செவிகளையும்    திருத்தி   அழகைக்    காணுமாறும் கேட்குமாறும்
செய்து அவர்களின்   வாழ்விற்குக் கலையின்பம் நல்கும் வள்ளல்கள்
கவிஞர்.


     + I soon found out, “he (Socrates) said, "that poets do
not   compose poetry because they are wise, but because
they  have a    certain nature or genius. Which is capable
of   enthusiam like  prophets and ocular persons, who also
say  many fine       things without knowingwhat it is they 
are  saying."
    - L.Abervrombie, Principles of Literary Criticism, P.8 *


     * எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
         இறைவா! இறைவா! இறைவா!
      சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்குச்
        சேரும் ஐம்பூதத்து வியனுலகு அமைத்தாய்
      அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்
        ஆகப் பலப்பல அழகுகள் அமைத்தாய்.

                         - பாரதியார் பாடல்கள்.