பக்கம் எண் :

46இலக்கியத் திறன்

Untitled Document

              என்றும் உள்ள பொருள்களின் உண்மையை விளக்கும்
நூல்களும்    உள்ளன.    அவை கணக்கு நூல்கள் முதலியன. சென்ற
காலத்து    நிகழ்ச்சிகளை    விளக்கும்   நூல்களும் உள்ளன. அவை
வரலாறு,   நாட்குறிப்பு    முதலியன.   வரலாற்று  நூல்கள் முதலியன
மாறி  மறைதல்  இயற்கை.   ஆயின்,   கணக்கு நூல்கள் முதலியனவும்
மாறி       மறைகின்றனவே!     என்றும்    உள்ள    உண்மைகளை
எடுத்துரைக்கும்   அவை    அவ்வாறு   மறைதற்குக் காரணம் என்ன?
முப்பது  ஆண்டுகட்குமுன்    எழுதப்பட்ட    கணக்கு நூல்கள் இன்று
கற்கும்    மாணவர்க்குப்    பயன்படவில்லை.   அறிவியல்  நூல்களும்
அவ்வாறே     மாறி     விடுகின்றன.     மாறாத     உண்மைகளை
விளக்குவனவாக     இருந்தும்,     அந்நூல்கள்   மாறி மறைதலுக்குக்
காரணம்    என்ன?    உண்மைகள்     அழியாது   விளங்குகின்றன;
அவற்றைப்    பற்றிய    நூல்கள்   அழிந்து   புது நூல்களுக்கு இடம்
தருவதற்குக் காரணம் என்ன?


                  முப்பது ஆண்டுகட்கு முற்பட்ட அல்லது, முந்நூறு
ஆண்டுகட்கு     முற்பட்ட     இலக்கியங்களும் மாறாமல் அழியாமல்
வாழ்வு   பெற்று     விளங்குகின்றன.  தமிழ்  முதலான மிகப் பழைய
மொழிகளில்      ஈராயிரம்   ஆண்டுகட்கு   முற்பட்ட   பாட்டுகளும்
நிலையான   வாழ்வு    வாழ்கின்றன.   ஆனால்,   ஒரு நூற்றாண்டின்
அளவில்   தோன்றி   மறைந்த  கணக்கு நூல்களுக்கும் வரலாற்று நூல்
முதலியவற்றிற்கும்   கணக்கே   இல்லை.   ஆறுமுக நாவலர் காலத்துக்
கணக்கு   நூல்   முதலியவற்றை   இன்று   எங்கும்   காண முடியாது;
ஆயின்   நாவலர்   போற்றிய   அந்த  இலக்கிய  நூல்களை இன்றும்
விடாமல் போற்றிக் கற்கின்றோம், காரணம் என்ன?

         கணக்கு    நூல்    முதலியனவும்   மாறாத  உண்மைகளை
விளக்குகின்றன;     இலக்கிய      நூல்களும்     அவ்வாறே மாறாத
உண்மைகளை      விளக்குகின்றன .     ஆயின்,    கணக்கு   நூல்
முதலியவற்றில்      உண்மைகள்    மட்டும்    உள்ளன.    இலக்கிய
நூல்களிலோ,         உண்மைகளும்     உள்ளன;     உண்மைகளை
உணர்ந்தவர்களின்    அனுபவங்களும்   உள்ளன. அந்த அனுபவங்கள்
கலைஞர்கள்   நல்கிய   தனிச்   செல்வங்கள்;  அவர்கள் தந்த கலை வடிவங்களைவிட்டு   அந்த    அனுபவங்களைப்   பிரித்தல்  இயலாது.
கணக்கு நூல்கள்    முதலியவற்றில்   உள்ள உண்மைகளோ, அவற்றின்
ஆசிரியர்களோடு     தொடர்பு   இல்லாதவை.  ஏழட்டு   ஐம்பத்தாறு