பக்கம் எண் :

இலக்கியம் 53

Untitled Document

பாட்டின் தோற்றம்

     பாட்டு   எவ்வாறு   தோன்றியது?   டி.எஸ். எலியட்  என்ற
ஆங்கிலக்     கவிஞர்,    பாட்டின் தோற்றத்தை விளக்குமிடத்தில்,
காட்டுமிராண்டி   ஒருவன் காட்டில் தன் பறையை அடித்து மகிழ்ந்த
நிலையில் பாட்டுத்    தொடங்கியது என்கிறார். அன்று அவனுடைய
பாறையொலியில்    விளங்கிய     ஒலிநயம்,   இன்று எழுதப்படும்
பாட்டிலும்         விளங்குதலைச்   சான்றாகக்     காட்டுகிறார்.*
குழந்தையின்   அசைவிலும்    அழுகையிலும் ஆடலிலும் ஒருவகை
ஒழுங்கு   இருப்பது   போலவே   பழங் காலக் காட்டுமிராண்டியின்
நடையிலும்    செயலிலும்    பேச்சிலும்   விளையாட்டிலும் ஒழுங்கு
இருந்தது.   அத்தகைய    ஒழுங்கை    வேறு      எதனிடமாவது
கண்டபோதும்    கேட்டபோதும்   அவன் மகிழ்ந்தான். தானே ஒரு
நாள் அந்த ஒழுங்கு  விளங்குமாறு   பறையில் ஒலி எழுப்பியபோது
மிக மகிழ்ந்தான். தன் கையால் பறையைத் தட்டி ஒழுங்குற எழுப்பிய
ஒலியில் கேட்ட   நயம்   (rhythm)  அவனுடைய மனத்தில் நெடிது
நின்றது. மீண்டும்  மீண்டும்  அந்த ஒலியை எழுப்பி அதன நயத்தில்
திளைத்தான்.     பிறகு    பறையொலியோடு    சில சொற்களையும்
ஒலிகளையும்      சேர்த்து   ஒலித்து   மகிழ்ந்தான்.     அவ்வாறு
பிறந்ததுதான் பாட்டு.
 
வளர்ந்த நிலைகள்

     பிறகு   அந்தப்   பாட்டை  நினைவில் கொண்டு, தன் கையில்
பறை   இல்லாத    போதும்,   கையில்    தாளம் கொட்டி ஒலித்து
மகிழ்ந்தான்.   தான்   இங்கும் அங்கும் ஒடி ஆடிய போது உள்ளக்
கிளர்ச்சி   ஏற்பட்ட   வேளையில்   அந்தப்   பாட்டை அவ்வாறே
ஒலிநயத்தோடு     பாடிமகிழ்ந்தான்.    இது     இரண்டாம் நிலை,
நாளடைவில்,    உள்ளக்கிளர்ச்சியால்   தோன்றிய அந்தப் பாட்டை,
உள்ளக்கிளர்ச்சி          ஏற்படுவதற்காகவே        பயன்படுத்தத்
தொடங்கினான்.      அதாவது,   தொழில்    செய்யும்போதும், ஓடி
ஆடும்போதும்   உள்ளக் கிளர்ச்சி      நீடித்திருப்பதற்காக அந்தப்


  * Poetry begins, I dare say,with a savage beating a drum
in a jungle, and it retains that essential of percussion and
rhythem.

   -T.S. Elliot, The Use of poetry and the Use of Criticism, p. 155.