பக்கம் எண் :

54இலக்கியத் திறன்

Untitled Document

பாட்டைப்    பாடிப்    பயன்படுத்திக்     கொண்டான்.* அவ்வாறு,
எதிர்பாராமல்   விளைந்த   ஒன்றை, எதிர்பார்த்து ஒரு பயன்கருதிக்
கருவியாகக்     கையாண்டது    மூன்றாம்    நிலையாகும்.   பிறகு,
கூட்டமாய்ச்   சிலர்   கூடி   உணர்ச்சி வயப்பட்டு  மகிழ்ந்தபோதும்
அவ்வாறு   பாட்டைப் பாடும்   வழக்கம்   ஏற்பட்டது.+ இது அதற்கு
அடுத்த   நான்காம்   நிலை    எனலாம். இந்த நான்கு நிலையிலும்
பாட்டுத் தனக்கென ஒரு வடிவும் வாழ்வும் பெறவில்லை.

     அவ்வாறு    பாடிக்   கற்ற     பாட்டை, ஓய்வான காலத்தில்
ஓடியாடாத   நிலையில்   தனியே   இருந்து பாடி, பழைய ஆடலை
நினைந்து   மகிழ்ந்த   நிலை வந்தது. இந்த ஐந்தாம்  நிலையிலேயே
பாட்டு ஒரு   தனிக்கலையாய் வளர்ச்சி  பெற்றது.   காலப்போக்கில்,
நாகரிகம்   வளர வளர,    சொற்கள் பெருகி மொழி பண்பட்டபிறகு
உணர்ச்சியிலும்    கற்பனையிலும்   சிறந்த   ஒரு சிலர் ஒலிநயமும்
பொருளும்   அமையப்    பாட்டுப்பாடிக்  கேட்பவரை மகிழ்விக்கும்
நிலை   வந்தது.   கேட்டவர்   அந்தப்   பாட்டை    அவருடைய
வாயாலேயே   கேட்டுக்  கற்று, அவர்போலவே பாடி,  அவர் உற்ற
உணர்ச்சியையே   தாமும  உற்று    மகிழ்ந்தனர்.  பின்னர், புலவர்
வாயால்   பாடி  மகிழ்விப்பது குறைந்து, எழுதி  மகிழ்விக்கும் நிலை
வந்தது.   புலவர்  பாட்டை எழுதியுதவ, அதைக் கற்றவர் போற்றிப்
படித்து    மகிழும்  நிலை  இது.   இதுவே இன்று உள்ள பாட்டின்
நிலையாகும்.

     இவற்றுள்    முதல்   நிலையை   இன்றைய பாட்டில் தனியே
காணல்    இயலாது   எனினும்,   வந்த  ஒலியே திரும்பத் திரும்ப
வருமாறு அமைந்த பாட்டுகளில் அதைக் காணலாம்.


    

     * But to our ancestors a song was not a performance;  
it was      simply an accompaniment of their everyday life
arying as that life varied. -P.H.B. Lyon, The Discovery
of Poetry, p.48.
     + Poetry arose from the social or communal expression
of emotions     held in common by primitive groups of men,
and only by    degrees came to be a means of expression 
of the feelings   and ideas of  individuals.... individual artists
of course     contribute to the  development at this poetry,
and I ad their  fellows in uttering it; but it is; in a very real 
way, the    voice of the people as a whole. R.M. Alden, An introduction to Poetry, p. 29.)