பக்கம் எண் :

56இலக்கியத் திறன்

Untitled Document

       தீங்கரும்பு நல்லுலக்க்கையாகச் செழுமுத்தம்
      பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர்
     ஆழிக்கொடித்திண்தேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப்
     பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல்
     பாவமார் ஆரிரக்கும் பாடலே பாடல்


என்பது   தமிழிலக்கியத்தின்  உள்ள மிகப் பழைய வள்ளப் பாட்டு 
ஆகும்.*

       தொழிலுக்குத் துணையாக நிற்கும் பாட்டு நிலையிலிருந்து கூடி
மகிழும் மகிழ்ச்சிப் பாட்டு வளர்ந்ததைக் கும்மிப் பாட்டு, அம்மானைப்
பாட்டு, கும்மிப்பாட்டு   அம்மானைப்  பாட்டு,  ஊசல்பாட்டு முதலிய
வற்றில் காணலாம்.
 
       வன்சொல் யவனர் வளநாடு வன்பெருங்கல்
      தென்குமரி ஆண்ட செருவில் கயல்புலியான்
      மன்பத காக்கும்கோமான் மன்னன் திறம்பாடி
      மின்செய் இடநுடங்க ஆடாமோ ஊசல்
      விறல்வில் பொறிபாடி ஆடமோ ஊசல் +


என்பது இளங்கோவடிகள் பாடித் தந்துள்ள ஊசல்பாட்டு.

புறவுநிறை புக்குப் பொன்னுலகம் ஏத்தக்
குறவில்உடம்பரிந்த கொற்றவன்யார் அம்மானை
குறவில் உடம்பரிந்த கொற்றவன்முன் வந்த
கறவை முறசெய்த காவலன்காண் அம்மானை
காவலன் பூம்புகார் பாடலோர் அம்மானை++

என்பது    அவர்   தந்துள்ள அம்மானைப் பாட்டு. மாணிக்கவாசகர்
முதலிய     சான்றோர்    பாடிய ஊசல்பாட்டு அம்மானைப் பாட்டு
முதலியனவும் உள்ளன.


     * சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதை.
     + சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதை.
     ++ சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதை.