பக்கம் எண் :

இலக்கியம் 57

Untitled Document

       பொன்னிலங்கு பூங்கொடி 
           பொலஞ்செய்கோதைவில்லிட  
     மின்னி லங்கு மேகலைகள்
          ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும்
     தென்னன் வாழ்க வாழ்க என்று
          சென்று பந்த டித்துமே
     தேவராரமார்பன்வாழ்க
 
            என்று பந்த டித்துமே.**

      என்ற  பழைய  கந்துகவரியில் மகளிர் பந்தாடும்போது பாடும்
பாட்டு உள்ளது.

      நான்காம்   நிலையில், ஆடலோடு கலந்த பாட்டாக விளங்கிய
அதனையே     ஆடல்     இல்லாத  போதும் பயன்படுத்தியதற்குப்
பாரதியாரின் 'சுதந்திரப் பள்ளு'  என்னும் பாட்டை எடுத்துக்காட்டாகக்
கூறலாம்.என்ற பழைய   கந்துகவரியில் மகளிர் பந்தாடும்போது பாடும்
பாட்டு உள்ளது.

        

          ஆடுவோமே-பள்ளுப்
                பாடுவோமே;
          ஆனந்த சுதந்திரம்
             அடைந்து விட்டோம் என்று - ஆடுவோமே....
          உழவுக்கும் தொழிலுக்கும்
             வந்தனை செய்வோம் -வீணில் 
          உண்டுகளித்திருப்போரை  
             நிந்தனை செய்வோம்
          விழலுக்கு நீர்ப்பாய்ச்சி
             மாய மாட்டோம் -வெறும் 
          வீணருக்கு உழைத்துடலம்
             ஓய மாட்டோம் - ஆடுவோமே...*

         இங்குப்   பள்ளுப்   பாட்டிற்கு  உரிய பள்ளரின் ஆடல்
(களியாட்டம்) இல்லை.  இந்திய   மக்களின்  சுதந்திர வேட்கையாகப்
பறந்த   உள்ளத்தின்  துள்ளலே  இங்கு  உளளது். ஆகையால் இது
ஐந்தாம் நிலையாம்.
_________________________________________________ ** சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதை.
*  பாரதியார் பாடல்கள்,-சுதந்திரப்பள்ளு