பாட்டுகளிலும் இடம் பெறுகின்றன. பழமைக்கும் பழமையான அவற்றையே தேர்ந்தெடுத்துப் புதுமைக்கும் புதுமையாகும் வகையில் உணர்ச்சி யூட்டிப் படைக்கும் திறன் புலவர்பெருமக்க ளிடம் உள்ளது.* பாட்டில் இன்ன பொருள் பற்றிப் பாடலாம், இன்ன பொருள் பற்றிப் பாடலாகாது என்ற வரையறை இருத்தல் இயலாது. பாடுவோரின் அனுபவத்திற்கு ஏற்ப எதுவும் பொருளாக அமையலாம். பாடுவோரின் அனுபவம் உயர்ந்ததாயின், சிறிய பொருள் பற்றிப் பாடும் பாட்டும் விழுமிய பாட்டு ஆகலாம். அவருடைய அனுபவம் தாழ்ந்ததாயின், உயர்ந்த பொருள் பற்றிப் பாடும் பாட்டும் சிறப்பிழந்து போகலாம். வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி! தினமும்இவ் வுலகில் சிதறியே நிகழும் பலபல பொருளிலாப் பாழ்படு செய்தியை வாழ்க்கைப் பாலையில் வளர்பல முட்கள்போல் பேதையுலகைப் பேதைமைப் படுத்தும் வெறுங்கதைத் திரளை வெள்ளறி வுடைய மாயா சக்தியின் மகளே மனைக்கண் வாழ்வினை வகுப்பாய் வருடம் பலவினும் ஓர்நாட் போலமற் றோர்நாள் தோன்றாது பலவித வண்ணம் வீட்டிடைப் பரவ நடத்திடும் சக்தி நிலையமே நன்மனைத் தலைவி! ஆங்கத் தனிப்பதர்ச் செய்திகள் அனைத்தையும் பயன்நிறை அனுபவம் ஆக்கி உயிரிலாச் செய்திகட்கு உயிர்மிகக் கொடுத்து ஒளியிலாச் செய்திகட்கு ஒளியருள் புரிந்து வான சாத்திரம் மகமது வீழ்ச்சி சின்னப் பையல் சேவகத் திறமை எனவரும் நிகழ்ச்சி யாவே ஆயினும * Now that is what the greatest poetry has always built on. Its roots strike deep into the externally familiar. But the gift of the goods to genius is the power to catch and fix that familiar in the recurrent act of becoming new. That is originality. -I,L Lowes, Convention and Revolt in poetry, p.86 . |