பாரதியார் பாடின, அது புதுப்பாட்டாக வாழ முடிகிறது. நிலவு, கடல், மலை முதலிய மிகப் பழம் பொருள்களயே பாடினும் அப்பாட்டுகள் புதுமையான கலைவிருந்து நல்குதற்கும் காரணம் அதுவே.* இவ்வாறு புதுப்புது உணர்ச்சிகள் அமைந்த கற்பனைகளைப் படைக்க வல்லவராக இருப்பதால், பாடும் புலவர்கள் தொன்று தொட்டுப் போற்றப்பட்டு வருகிறார்கள். கிரேக்க மொழியில் கவிஞன் என்பதை உணர்த்தும் சொல்லுக்குப் படைப்பவன் என்றே பொருள் உள்ளது. (Poet=marker).1 கவிஞரிடம் உள்ள பெருமதிப்பின் காரணமாக, ஞானி என்றும் அறிஞர் என்றும் பொருள்படும் புலவர் என்ற சொல்லையே பழந்தமிழ் வழங்கியது போலவே ஹீப்ரூ மொழியிலும், கவிஞர்க்கும் ஞானிக்கும் பொதுச் சொல்லை வழங்கினர்.2 * The subject in poetry is not so much the thing talked of as the poet's relation with that thing. It is that thing seen through his temperament, idealized and transfigured by his imagination, emotionally realized in his sensitive being -S.J. Brown, The Realm of poetry. p.50-51. 1. S.j. Brown. The Realm of poetry, p. 190 2. C.T. Winchester, Some Principles of Literary Criticism, p. 242. |