5. உணர்ச்சி கலைக்கு இன்றியமையாதவை உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகிய மூன்றும் ஒவ்வொரு கலைக்கும் இன்றியமையாத உறுப்புகள், கருத்து என்ற ஒன்றும் கலைகளுக்குத் தேவை என்றும், பாட்டோடு கூடாமல் தனியே ஒலிவடிவாக உள்ள இசைக்கு மட்டும் கருத்துத் தேவை இல்லை என்றும் கூறுவர்.* இலக்கியத்திற்கு இன்றியமையாத கருத்து, உணர்ச்சி, கற்பனை, அழகிய வடிவம் ஆகிய இந் நான்கும் ஒருங்கே சிறந்து அமைதல் அரிது, மிகச் சிறந்த புலவரிடத்தில் நான்கும் ஒருங்கே சிறந்துஅமைதல் உண்டு. மற்றவர்களின் பாட்டில் உணர்ச்சி நன்கு அமைந்திருந்து, அழகிய வடிவம் அமையாதிருத்தல் உண்டு. அழகிய வடிவம் அமைந்தது. கற்பனை வளமுற அமையாதிருத்தலும் உண்டு. இவ்வாறு ஒன்று சிறப்புற்று. மற்றொன்று நன்கு அமையாதிருத்தலே பெரும்பாலான பாட்டுகளின் இயல்பாகும். அதனால் அவற்றின் வாழ்வு கெடுவ தில்லை. சிறந்து விளங்கும் பகுதியை விரும்பி அதனால் மக்கள் அந்தப் பாட்டுகளைப் போற்றிவருவர். உணர்ச்சிகள் பொது அறிவுத் துறையில் காலத்திற்குக் காலம் வேறுபடுதல் போல், ஒரே காலத்தில் மனிதருக்கு மனிதர் வேறுபடுதல் உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அறிவுத் துறையில் மிக்கும் குறைந்தும் விளங்குகின்றனர். ஆனால், உணர்ச்சித் துறையில் விருப்பு வெறுப்பு இன்பம் துன்பம் முதலியன எல்லாக் காலத்திலும் ஏறக்குறைய ஒரே தன்மையாக இருந்து வருதல் போலவே, ஒரே காலத்தில் வாழும் மக்கள் பலர் எய்தும் உணர்ச்சிகளும் _________________________________________________
* C.T. Winchester, Some Principles of Literary Criticism, p. 61 |